விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து தன் மீதான பேட்டிங் விமர்சனங்களுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இந்த சூழ்நிலையில் முன்னர் நடந்த ஒரு நிகழ்வு குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அஸ்வின் விரிவாக கூறும்போது “அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டி20 உலக கோப்பையின் போது மொகாலியில் மிகச்சிறப்பாக சதம் அடித்தார். நான் அப்போது விராட் கோலி இடம் சென்று எப்படிப்பட்ட இன்னிங்ஸ் என்று கூறினேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே எப்படிப்பட்ட இன்னிங்ஸ் சென்று மறுபடி என்னிடம் கேட்டார். நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது எனக்கு பிடிக்கவில்லை. அவர் எதற்காக இப்படி இருக்கிறார் என்று தோன்றியது.
ஆனால் தற்போது இரண்டு சதங்கள் அடித்த போது அவரது கொண்டாட்டங்கள், தன் மீதான விமர்சனங்களுக்கு ஆக்ரோஷமாக பதில் அளிக்க தொடங்கி விட்டார். அவர் இதன் மூலமாக ஏதோ பதில் சொல்ல நினைக்கிறார். அவர் எப்படிப்பட்ட கஷ்ட காலங்களை கடந்து வந்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும். அவர் டெஸ்ட் கிரிக்கெட் விரும்பி விளையாடினார். ஆனால் அதிலிருந்து அவர் ஓய்வு பெற்று விட்டார். அந்த நேரத்தில் அவரது பேட்டிங் மீது நிறைய சந்தேகங்கள் இருந்தது. ஆனால் என் பேட்டிங் மீது சந்தேகப்படுகிறீர்களா? என்பது போன்று தற்போது அனைத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விராட் கோலி அதிரடியாக விளையாடி வருகிறார்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.

