இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ருத்ராஜுக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரும் இந்திய வீரருமான ருத்ராஜ் கெய்க்வாட் அபிஷேக் ஷர்மா இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு முன்பாகவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார். அதுவும் மேக்ஸ்வெல்லின் பந்துவீச்சில் அடித்து நொறுக்கி டி20 யில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆனால் அதற்குப் பிறகு அபிஷேக் ஷர்மா இந்திய டி20 அணியில் இடம் பிடித்த உடன் ஜிப்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சதம் அடித்த நிலையில் அதற்குப் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட தொடர்ச்சியான வாய்ப்புகளினால் 15 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்து வந்த ருத்ராஜ் அதற்குப் பிறகு முற்றிலுமாக இந்திய நிர்வாகத்தால் ஓரம் கட்டப்பட்டு வருகிறார். மற்றொரு துவக்க ஆட்டக்காரராக சஞ்சு தனது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ருத்ராட்சுக்கு ஏன் வாய்ப்பு அமையவில்லை என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்
இது குறித்து அஸ்வின் விரிவாக கூறும்போது ” இந்தியாவின் டாப் ஆர்டர் என்பது தற்போது நிரம்பி இருக்கிறது. கில், ருத்ராஜ், ஜெய்ஸ்வால் என நிறைய பேர் இருக்கிறார்கள். இதில் ஒரு சிலர் கிரிக்கெட் விளையாடுகிறார்கள் ஒரு சிலர் அணியிலேயே வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். ருத்ராஜ் தன்னுடைய கடைசி தொடரில் சதம் அடித்திருந்தார். அதுவும் மேக்ஸ்வெல் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார்.
இதையும் படிங்க:கம்பீர் கங்குலிய திட்டினத அவர்கிட்ட சொல்லிட்டேன்.. அதுக்கு கங்குலி இதுதான் சொன்னார் – மனோஜ் திவாரி பேட்டி
இந்த மாதிரியான சூழ்நிலையில் துவக்க ஆட்டக்காரர்களுக்கான இரண்டு இடத்தில் ஒரு இடத்தை சஞ்சு சாம்சன் கெட்டியாக பிடித்துக் கொண்டார். மூன்றாவது இடத்தில் அவர் விளையாடிய நிலையில் கடைசி இரண்டு சதங்கள் அவர் அடித்ததன் மூலமாக தொடக்க இடத்தை அவர் முழுவதுமாக பிடித்துக் கொண்டார். மற்றொரு துவக்க இடத்திற்கு அபிஷேக் ஷர்மா மீது அழுத்தம் உருவாகியது. ஆனால் இந்திய நிர்வாகம் கொடுத்த சுதந்திரத்தின் காரணமாக அவரும் தற்போது இயல்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்து வருகிறார். இதனால் தான் ருத்ராஜூக்கு வாய்ப்பு அமையவில்லை” என்று அஸ்வின் கூறியிருக்கிறார்.

