கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய போது கம்பீர் மற்றும் கங்குலி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் போது இந்த இருவருக்குள் சில பிரச்சனைகள் இருந்ததாகவும் அது ரஞ்சி டிராபி தொடர் வரை நீடித்து வந்ததாகவும் மனோஜ் திவாரி இது குறித்து பேசி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கம்பீர் மற்றும் கங்குலி ஆகியோர் இணைந்து விளையாடிய போது இந்த இருவருக்குள்ளும் சில பிரச்சனைகள் இருந்துள்ளது. மேலும் அது இந்திய உள்நாட்டு தொடரான ரஞ்சி டிராபிக் தொடர் வரை அடித்து வந்ததாகவும் மனோஜ் திவாரி சில விரிவான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து மனோஜ் திவாரி கூறும் பொழுது ” கம்பீர் தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்த சமயத்தில் கங்குலி அப்போது பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய பொறுப்பில் சேர்ந்தார் என்று நினைக்கிறேன். அப்போது கங்குலியை அவர் மோசமாக திட்டினார். அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி பதவிக்கு வந்திருப்பதாகவும் நீயும் அப்படித்தான் வந்தாயா என்று கேட்டார். நான் இதை கங்குலி தாதாவிடம் தெரிவித்த போது இதுகுறித்து எதுவும் நீ பெரிது படுத்த வேண்டாம் அமைதியாக விட்டுவிடு என்று கூறினார்.
ஆனால் இதை அவரிடம் தெரிவிக்க வேண்டியது எனது கடமையாக இருந்தது. அதனால்தான் இதை நான் அவரிடம் தெரிவித்தேன். கம்பீருக்கு இப்போது வரை கோபம் என்பது ஒரு பிரச்சனையாக இருக்கிறது. நான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவரிடம் பேசுவதில்லை. மேலும் பேசுவதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கம்பீர் போல வேறு யாரும் அவதூறாக திட்டி நான் யாரையும் பார்த்ததில்லை. உங்கள் அம்மாவை யாரேனும் தவறாக பேசினால் அதை பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இதையும் படிங்க:அடிச்சு சொல்வேன்.. ரஷீத் கானை விட வருண் சக்கரவர்த்தி சிறந்த பவுலர்.. அதுக்கு காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா விளக்கம்
நான் அப்படி எதுவும் பொறுத்துக் கொண்டு போகிற ஆள் கிடையாது. நான் அப்போது அவரிடம் கௌதி பாய் ஏன் இப்படி பேசுகிறீர்கள், மாலை உங்களை சந்திக்கிறேன் என்று கூறினேன். எந்த வீரரும் அப்படி என்னை பேசியதில்லை. கம்பீர் பேசியதை எந்த பத்திரிக்கை நிபுணரும் கேட்டிருக்க மாட்டார்கள். அவர் ஒரு மோசமான நபராக இருந்திருக்கிறார் என்று கூறினார். மனோஜ் திவாரி கம்பீர் குறித்து முன்பிருந்தே குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது கௌதம் கம்பீர் குறித்து மேலும் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

