நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் வருண் ரஷீத் கானை விட சிறந்த பவுலர் என்று அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பாகவே டி20 உலக கோப்பையில் இடம் பிடித்து விளையாடினார். ஆனால் அப்போது இவரது பந்துவீச்சை எளிதாக பேட்ஸ்மேன்கள் கணித்து விளையாடினர். அதற்குப் பிறகு தனது பந்துவீச்சில் மேலும் வேலை செய்து கடந்த சில வருடங்களாக கொல்கத்தா அணியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி திரும்பவும் இந்திய அணிக்குள் நுழைந்தார்.
அதற்குப் பிறகு இவரது பந்து வீச்சு இந்திய அணியில் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் விளையாடிய வருண் நான்கு ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தற்போது டி20 உலகில் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளராக கருதப்படும் ரஷீத் கானை விட வருண் சிறந்த பந்துவீச்சாளர் என்று அதற்கான காரணத்தை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “வருண் திரும்ப வந்து பவர் பிளேவில் பந்து வீச ஆரம்பித்து விட்டார். பவர் பிளேவின் முடிவில் அவர் பந்து வீசும் விதம் மிகவும் அற்புதமானதாக இருக்கிறது. இதில் குறிப்பாக எனக்கு அவரிடம் பிடித்து விஷயம் என்னவென்றால் அவர் பந்தை காற்றில் மெதுவாக பிளைட் செய்து வீசுவது தான். இப்போதெல்லாம் சுழற்பந்துவீச்சாளர்கள் அடி வாங்கியவுடன் பந்தை வேகமாகவும் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை மெதுவாகவும் வீச ஆரம்பிக்கிறார்கள்.
இதையும் படிங்க:விராட் கோலி தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டார்.. இந்த ஒரு விஷயத்தை மட்டுமே யோசிச்சிட்டு இருப்பார் – முகமது கைஃப் பேட்டி
ஆனால் இவர் அது போன்று எதுவும் செய்யாமல் தொடர்ந்து பந்தினை காற்றில் மெதுவாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். ரஷித் கான் அடிபட்டால் உடனே பந்தை வேகமாக வீச ஆரம்பித்து விடுவார். ஆனால் இவர் அது போன்று நிச்சயம் செய்வதில்லை. முன்பெல்லாம் வருண் சக்கரவர்த்தி கூக்ளி வீச பந்தை வேகமாகவும் லெக்பிரேக் வீச மெதுவாகவும் வீசினார். ஆனால் இப்போது அனைத்தையும் ஒரே மாதிரியாக மெதுவாக வீசுகிறார். இவரிடமிருந்து தவறான பந்துகள் அரிதாகவே வருகிறது” என்று கூறி இருக்கிறார்.

