இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடி முடித்தவுடன் அதற்குப் பிறகு நடைபெற உள்ள ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மீண்டும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தொடர்ச்சியாக இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் நடைபெற இருக்கிறது. இதில் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரில் விளையாடி முடித்தவுடன் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதில் மீண்டும் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்க தயாராக இருக்கிறார்கள்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான செயல்பாட்டினை வெளிப்படுத்தினாலும், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இவர்கள் இருவருமே இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். அதாவது விராட் கோலி தோல்வியை அவ்வளவு எளிதாக ஒப்புக்கொள்ள மாட்டார் எனவும், மீண்டும் பழைய பார்முக்கு திரும்ப போராடுவார் என சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலியை பொருத்தவரை அவர் எப்போதுமே தோல்வியை எளிதாக ஒப்புக்கொள்ள மாட்டார். எப்படி கம் பேக் கொடுக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருப்பார். எனவே விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை மறந்து விடுங்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை 50 சதங்கள் மற்றும் 13000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். விராட் கோலி கடைசியாக துபாயில் கூட 61 பந்துகளில் 122 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதையும் படிங்க:நானே உறுதியா சொல்றேன்.. சாம்பியன் டிராபி இந்திய டீமில்.. இந்த பையனுக்கு பிளேயிங் XIல் இடம் கிடைக்காது.. அஸ்வின் தைரியமான பேட்டி
அந்த இன்னிங்ஸில் மட்டுமே விராட் கோலி 6 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் துபாயில் எப்போதுமே கிரிக்கெட் போட்டிகளை விளையாட விரும்புவதால் சாம்பியன் டிராபி தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே விராட் கோலி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்” என்று கூறியிருக்கிறார்.

