நானே உறுதியா சொல்றேன்.. சாம்பியன் டிராபி இந்திய டீமில்.. இந்த பையனுக்கு பிளேயிங் XIல் இடம் கிடைக்காது.. அஸ்வின் தைரியமான பேட்டி

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2025-ஆம் ஆண்டின் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ரோபியில் இந்திய அணியின் பிளேயிங் XI-இல் இடம் பெற மாட்டார் என்று கருதுகிறார்.

- Advertisement -

அஸ்வின், அணி என்பது தனி நபருக்காக உருவாக்கப்படவில்லை என்றும் கடந்த 18 மாதங்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பார்மில் இருக்கிறார். எனவே, அவரை பிளேயிங் XI-இல் சேர்ப்பது அணி நிர்வாகத்தின் மோசமான முடிவாக இருக்காது எனவும் கூறி உள்ளார்.

- Advertisement -

அணியை ஒரு நபருக்காக மாற்றி உருவாக்காதீர்கள்:

அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது, “முதலில் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அணி என்பது தனிநபருக்காக உருவாக்கப்படவில்லை எனவே தனி நபருக்காக நீங்கள் ஒரு அணியை உருவாக்க கூடாது. அதே நேரத்தில், ஒரு வீரர் சிறப்பான நிலைமையில் இருந்தால், அந்த வீரரை சரியான முறையில் பயன்படுத்துவது ஒரு அணியின் பொறுப்பாகும்.

- Advertisement -

யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 18 மாதங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் என்று சொல்லலாம். நடந்து முடிந்த T20 உலகக் கோப்பையில் அவர் இடம்பெறவில்லை. நாம் T20 உலகக் உலகக்கோப்பையின் போது அவர் இடம்பெறுவதை குறித்து பேசவில்லை. ஆனால் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபியில் அவர் இடம்பெறுவதை குறித்து நான் கட்டாயம் பேச வேண்டும்.

என்னை பொறுத்தவரையில் ஜெய்ஸ்வாலினை எடுக்க மிக வலுவானது இரண்டு காரணங்கள் எனக்கு உண்டு. ஒன்று, அவரின் ஆட்டம் மற்றொன்று அவர் அந்த ஆட்டத்தை நோக்கி செல்கின்ற விதம். அவரே அணியில் எடுப்பார்களா என்பதைக் குறித்து எனக்கு சந்தேகமாக தான் இருக்கிறது. அதனால் அவரே அணியில் எடுத்திருந்தால் நான் மிகவும் ஆச்சரியப்படுவேன், ஜெய்ஸ்வாலினை அணியில் சேர்ப்பது என்பது நிச்சயமாக ஒரு தவறான முடிவு அல்ல. அணியின் நலனுக்காக நிர்வாகம் எடுத்த நல்ல முடிவாகும்.”

- Advertisement -

என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:

மேலும் அவர், “அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. தற்போது 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர். ஹர்திக் மட்டுமே உங்களின் 3வது வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 4வது வேகப்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி நடைபெறும் இடத்தில் பனிப்பொழிவும் வர இருக்கிறது. இடது கை மட்டையாளரும் அணியில் இல்லை. தற்போது, ஜெய்ஸ்வால் நல்ல பார்மில் உள்ளார். எனவே நீங்கள் அவரை அணியில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் அவரைப் பயன்படுத்த மாட்டீர்கள். அதனால் தான் நான் இந்தக் கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.” என்றார் அஸ்வின்.

ஜெய்ஸ்வால் கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இடது கை ஆட்டக்காரர் 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 161 ரன்களுடன் 391 ரன்களை எடுத்ததன் மூலம் இந்தியாவுக்காக அதிக ரன் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles