இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் தோல்விகளை சந்தித்த நிலையில் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கட் கூறிய கருத்துக்கு இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்திருந்தது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கட் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை இந்திய அணியை சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வீழ்த்த வேண்டும் என்பதே எனது இலக்காகும் என பேசி இருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரது கருத்துக்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது பதில்களை கொடுத்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே விமர்சத்திற்கும் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டக்கட் கூறிய இந்த கருத்துக்கு தக்க பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதாவது உங்கள் தோல்விகளை நகைச்சுவைகளுக்கு பின்னால் மறைக்கக் கூடாது எனவும் மூன்று நான்கு வருடங்களாகவே உங்களுக்கு இந்த நிலை தான் உள்ளது எனக் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அஸ்வின் கூறும் போது “சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடப் போகும் டக்கட் என்ன சொன்னாலும் பரவாயில்லை. ஆனால் இந்திய அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது அவர்களை பெரிதாக பாதிக்கும். ஏற்கனவே அவர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணியின் அதிரடி முறையை பார்த்தே அதனை அவரும் கற்றுக் கொண்டார் என பேசி இருந்தார். டக்கட் இது போன்ற காமெடிகள் செய்வதற்கு எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதை நன்றாக அறிவேன்.
இதையும் படிங்க:சிஎஸ்கேவை காப்பி அடித்த ஆர்சிபி.. புது கேப்டன் அறிவிப்பு.. கோலியை எடுக்காத காரணம் என்ன.?. வெளியான முழு தகவல்
ஆனால் தற்போது அவர் கூறிய கருத்து குறித்து நன்றாக சிந்திக்க வேண்டும். அதாவது தோல்விகளை அவர்கள் நகைச்சுவைகளுக்கு பின்னால் மறைத்து வைக்க பார்க்கிறார்கள். உங்களது கடைசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் செயல்பாடு மிக மோசமாக இருந்திருக்கிறது. இது மூன்று நான்கு வருடங்களாகவே இது போன்ற நிலை தான் இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

