ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் 3 மாதங்களில் நடக்கவுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் நிறைவு செய்தன. இதனால் ஐபிஎல் மினி ஏலத்தில் இரு அணிகளும் பல்வேறு மாற்றங்களை செய்ய முடிவு எடுத்துள்ளது. அதேபோல் டிரேட் பேச்சுவார்த்தைகளும் தொடங்கி இருக்கின்றன.
அஸ்வின் விளக்கம்
இதனால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி டிரேட் செய்ய கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் அணி தரப்பில் அஸ்வின் மற்றும் சிவம் துபே ஆகிய இருவரையும் கேட்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய ஸ்பின்னர் ஒருவர் கட்டாயம் வேண்டும் என்பதில் ராஜஸ்தான் அணி குறியாக இருக்கிறது.
இதனால் இரு அணிகளின் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால் அஸ்வின் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் பேசும் போது, கடந்த ஆண்டு ரூ.9.75 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியது. சஞ்சு சாம்சனின் விலையாக ரூ.18 கோடி இருக்கிறது.
சிஎஸ்கே அணியில் நடப்பது என்ன?
ஒருவேளை சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை வாங்க விரும்பினால், அவர்களின் கையிருப்பில் ரூ.18 கோடி இருக்க வேண்டும். ஒருவேளை சிஎஸ்கே அணி ரூ.18 கோடி மதிப்பிலான வீரர்களை ரிலீஸ் செய்தால், அவர்களால் ரூ.18 கோடி மதிப்பிலான வீரர்களை டிரேட் செய்ய முடியும். அவர்களை ராஜஸ்தான் அணிக்கும் கொடுக்கலாம்.
இல்லை மற்ற அணிகளுக்கும் கொடுக்கலாம். இது நடந்து வருகிறது என்று சொல்லவில்லை. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது என்பதை பற்றி சிறிய அளவில் கூட எனக்கு தெரியாது. சிஎஸ்கே அகாடமியுடன் கொஞ்சம் இணைந்து பணியாற்றி வருகிறேன். அதனால் சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் செய்திகள் குறித்து எதுவும் தெரியாது. ஆனால் நிறைய மீட்டிங்கள் நடக்கிறது. அதன் மூலம் இறுதி முடிவை எடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

