இதைப் பார்த்தாவது திருந்துங்கள்.. இனிமேல் தென் ஆப்ரிக்காவுக்கு சென்று விளையாடாதீங்க.. ரவி சாஸ்திரி ஆவேசப் பேச்சு

தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தை அண்மையில் நிறைவு செய்துள்ள இந்திய அணி, முதல் முறையாக எந்த ஒரு தொடர்களையும் அங் இழக்காமல் திரும்பியுள்ளது. அது மட்டுமில்லாமல் பல்வேறு சாதனைகளை புரிந்து வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

டி20ஐ தொடர் 1 – 1, ஒருநாள் தொடர் 2 – 1 எனும் கணக்கில் சிறப்பாக முடிந்த பிறகு சீனியர் வீரர்கள் கொண்ட அணி டெஸ்ட் தொடரில் களமிறங்கியது. முதல் டெஸ்ட்டை தென்னாபிரிக்காவும் அடுத்த போட்டியை இந்தியாவும் வென்றனர். இந்தத் தொடரும் சமனில் முடிந்தது முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் ரவி சாஸ்திரியை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

கடந்த ஆண்டு இந்திய – தென்ஆப்ரிக்கா டெஸ்ட் தொடர் 3 போட்டிகள் கொண்டதாக இருந்தது. என்னதான் இந்திய அணியால் தொடரை வெல்ல இயலவில்லை என்றாலும் அந்தத் தொடரில் ஒரு முடிவு தெரிந்து, பரபரப்பாக அனல் பறந்தது. ஆனால் இம்முறை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமனில் முடித்துள்ளது.

- Advertisement -

இது குறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது, “ இனிமேல் பிசிசிஐ, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு அழைப்பு வந்தால் அணியை விளையாட அனுப்பக் கூடாது. இந்த டெஸ்ட் தொடரை பார்த்தாவது அவர்கள் இந்த விஷயத்தில் உறுதியாக இருக்க வேண்டும். ”

மேலும், “ காரணம் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேரத்தை வீணடிக்கிறது. எதாவது 2 ஃபார்மட்களில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பேசாமல் 3 டி20ஐ மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி இருக்கலாம். ” என்றார்.

- Advertisement -

ரவி சாஸ்திரி சொல்வது மிகவும் சரியாகவே படுகிறது. இப்படி 2 போட்டிகள் மட்டும் வைத்தால், தென்னாபிரிக்காவில் தொடரை வெல்வது இந்திய அணிக்கு மிகவும் சிரமமாகவே அமையும். காரணம் ஒரு போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றால் கூட தொடரை கைப்பற்றுவது சாத்தியமற்றது ஆகிவிடும்.

தென்னாபிரிக்கா அணி விரைவில் உள்நாட்டு டி20 தொடரை நடத்துகிறது. அதற்காக அவர்கள் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 போட்டிக்கு குறைத்துள்ளனர். மேலும் அடுத்ததாக நியூசிலாந்து நாட்டில் விளையாடவுள்ள டெஸ்ட் தொடருக்கு முற்றிலும் அனுபவம் இல்லாத அணியை அனுப்புகிறது. உள்நாட்டு டி20 தொடருக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்தாதது, பலரது குற்றச்சாட்டுகளை பெற்றுள்ளது தென்னாபிரிக்கா நிர்வாகம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles