கண்ணீர் விட்டு அழுத குர்பாஸ்.. இரண்டு வருட உழைப்பு வீணாய் போய்விட்டது ரஷித் கான் உருக்கம் – சூப்பர் ஓவர் தோல்வி

இன்று டி20 உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர் களை சந்தித்து இறுதியில் தோல்வி அடைந்தது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஏற்கனவே பெரிய அணியான நியூசிலாந்து அணியிடம் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்திருந்தது. இதைத்தொடர்ந்து இன்னொரு பெரிய அணியான தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்து இருப்பதால் அடுத்த சுற்று வாய்ப்பை ஏறக்குறைய ஆப்கானிஸ்தான் அணி இழந்துவிட்டது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பொழுது தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 42 பந்தில் 84 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு முக்கியமான பங்களிப்பை கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து இரண்டாவது சூப்பர் ஓவரில் நான்கு சிக்ஸர்கள் தேவைப்பட்டபோது தொடர்ந்து மூன்று சித்தர்கள் அடித்து போட்டியை ஆப்கானிஸ்தான் அணி கையில் வைத்திருந்தார். ஆனால் இறுதிப் பந்தில் சிக்சர் அடிக்க முடியாமல் தவறவிட்டார். இதற்குப் பிறகு வெளியே சென்ற அவர் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.

- Advertisement -

இந்த போட்டிக்கு பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் “இந்த போட்டியில் தோல்வி அடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை கொடுக்கிறது. நாங்கள் இந்த உலகக் கோப்பையில் அடுத்த சுற்றுக்கு செல்வதற்காக கடந்த இரண்டு வருடமாக கடுமையாக உழைத்து வந்தோம். தற்போது எங்களுடைய உழைப்பு வீணாகிவிட்டது. உலக அளவில் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையானது. அதற்காக நாங்கள் எங்களால் முடிந்த எல்லாவற்றையும் கொடுப்போம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles