இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இந்தத் தொடரை இலங்கை அணி 2-0 சென்ற கணக்கில் வெற்றி பெற்றது. மீண்டும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டி தொடரை இலங்கை வென்றுள்ளது. இலங்கை அணியுடன் இந்திய அணியின் தோல்வி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த தோல்வியை தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் தேர்விற்கு புறக்கணிக்கப்படுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளின் அடிப்படையில் இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்திருக்கிறார். இலங்கை அணியுடன் போட்டிக்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோஹித் சர்மா ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தான் இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு எனக் கூறிய ரோஹித் சர்மா இந்திய அணியின் வீரர்கள் உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக செயல்படுவதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும் அணி தேர்வு செய்யப்படும் போது தென்னாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் குறித்து விவாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து விரிவாக பேசிய ரோஹித் சர்மா இந்திய அணியின் வீரர்கள் ரஞ்சி கோப்பை மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதில் இருந்து தேர்வு செய்யப்படுவதாக கூறினார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரை விட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களை இந்திய அணிக்கு தேர்வு செய்வதாகவும் தெரிவித்தார். இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் போது ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே டிராபி மற்றும் செய்த அலி முஸ்தாக் டிராபி போன்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதின் அடிப்படையில் தேர்வு செய்கிறோம்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறும் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐபிஎல் போட்டிகளை விட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும் இந்திய அணியின் வீரர்களும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாட அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணியில் இடம் பெறும் சர்வதேச வீரர்களும் ரஞ்சி டிராபி போன்ற கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் தரம் மேம்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் தரம் சிறப்பாக இருப்பது சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றி வருவதாகவும் ரோஹித் சர்மா கூறியிருக்கிறார்.
மேலும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளோடு சேர்த்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்படுவதும் அணி தேர்விற்கு பரிசீலிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகின் சவாலான கிரிக்கெட் தொடர்களில் ஒன்று. அந்தத் தொடரில் சிறப்பாக செயல்படுவதும் அணித்தேர்விற்கு அளவுகோலாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியும் இந்தியாவிற்கானது. ரஞ்சி டிராபி, ஐபிஎல் மற்றும் இதர உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்தும் வீரர்கள் இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்படுகிறார்கள் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

