பாவம்.. இனி தெரியாம கூட பண்ண மாட்டார்.. கேகேஆர் வீரருக்கு ஐபிஎல் கொடுத்த மிகப்பெரிய தண்டனை

நேற்று நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சன்ரைசர்ஸ் வீரர்கள் மயங்க அகர்வால் மற்றும் ஹென்றிக் கிளாசன் ஆகியோரிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக கொல்கத்தா வீரர் ஹர்சித் ரானாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 207 ரன்களைக் குவித்தது. கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரசல் 25 பந்துகளில் 67 ரன்கள் அதிகபட்சமாக குவித்தார். இதில் ஏழு சிக்ஸர்களும், மூன்று பவுண்டரிகளும் அடங்கும். பந்துவீச்சு தரப்பில் நடராஜன் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

பின்னர் 208 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நல்ல அடித்தளம் அமைத்தனர். இந்த நிலையில் மயங்க் அகர்வால் 32 ரன்களில் ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த போது மயங்க அகர்வாளுக்கு பறக்கும் முத்தம் ஒன்றினைக் கொடுத்து ஹர்ஷித் ராணா வழி அனுப்பி வைத்தார்.

- Advertisement -

இது ரசிகர்களிடையே சற்று கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு மூத்த வீரரிடம் இவ்வாறு நடந்து கொள்ளலாமா என்றும் விவாத்தனர். மேலும் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஹென்றிக் கிளாசன் ராணாவின் பந்துவீச்சில் ஆட்டம் இருந்து வெளியேறினார். க்ளாசன் விக்கெட்டை ரானா கைப்பற்றியவுடன் வெளியே போ என்பது போல சைகை செய்தார். இத்தனைக்கும் மயங்க் அகர்வால் யாரிடமும் களத்தில் சண்டை போட்டது கிடையாது.

இந்த செயலை கண்ட பலரும் ஹர்சித் ரானாவை விமர்சிக்க தொடங்கினார்கள். ஒரு இளம் வீரர் இவ்வாறு நடந்து கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். கௌதம் கம்பீர் அவரது அணியில் ஆலோசகராக இருப்பதால் அவர் பாணியிலேயே இவர் பின்பற்ற நினைக்கிறாரா என்றும் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

- Advertisement -

எனவே இதனைக் கண்ட கள நடுவர் இவரது எல்லை மீறிய செயல்பாடுகளுக்காக உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். லெவல் 1 விதியை இரண்டு முறை மீறியதால் போட்டி கட்டணத்தில் இருந்து 60% அபராத தொகையாக இவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதை ஹர்ஷித் ரானாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால் இது போன்ற செயல்களில் எதிர்காலத்தில் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். முதல் தோல்வியை பெற்றுள்ள ஐதராபாத் அணி வருகிற புதன்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வருகிற வெள்ளிக்கிழமை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles