டி20 கிரிக்கெட் மாறிவிட்டது.. நாம் மாறவில்லை என்றால் அவ்வளவுதான்.. விராட் கோலி பேட்டி

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்களை விளாசி இருக்கிறது. சிறப்பாக விளையாடிய நட்சத்திர வீரர் விராட் கோலி 42 பந்துகளில் 67 ரன்களையும், கேப்டன் ரஜத் பட்டிதர் 32 பந்துகளில் 64 ரன்களையும் விளாசி அசத்தினர்.

- Advertisement -

இந்த இன்னிங்ஸை தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலி பேசும் போது, இந்த இலக்கை நிர்ணயித்தது சிறந்த விஷயம். 2வது பந்திலேயே  பில் சால்ட் விக்கெட்டை இழந்த பின், கவுன்டர்ட அட்டாக் செய்தது சிறந்த ஒன்றாகும். தேவ்தத் படிக்கல் ஆட்டம் அபாரமாஅன ஒன்றாக அமைந்தது. ஆர்சிபி அணியின் பேட்டிங்கிற்கு அது உத்வேகத்தை கொடுத்தது என்று சொல்ல வேண்டும்.

- Advertisement -

எனக்கும் அவருக்கும் இடையிலான பார்ட்னர்ஷிப் மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க சிறந்த அடித்தளமாக அமைந்தது. என்னுடைய பலமே, பந்தை சரியாக டக் செய்து விளையாடுவதுதான். அந்த உணர்வு கிடைத்துவிட்டால், உடனடியாக எனது ஷாட்களை விளையாட முடியும். கொஞ்சம் புதிய ஷாட்களை விளையாட முயற்சித்தேன். ஸ்பின்னர்களுக்கு எதிராக சில வித்தியாசமான ஷாட்களை ஆட முயன்றேன்.

- Advertisement -

தேவ்தத் படிக்கல் இன்னிங்ஸ்

அப்போது தான் மைதானத்தில் பல்வேறு திசைகளிலும் ரன்களை சேர்க்க முடியும். டி20 கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் போதும், நாமும் முன்னேறி செல்ல வேண்டும். என்னுடைய டைமிங் சரியாக அமைந்தால், என்னால் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும். பில் சால்ட் ஆட்டமிழந்த பின், உடனடியாக தாக்கத்தை கொடுக்கக் கூடிய இன்னிங்ஸை ஒருவர் விளையாட வேண்டிய நிலை உருவானது.

கடந்த 2 முதல் 3 போட்டிகளாகவே தேவ்தத் படிக்கல் அதனை செய்து வருகிறார். அதனால் அவர் பெரிய ஸ்கோரை விரைவில் அடிப்பார் என்று நினைக்கிறேன். அவர் பந்தை சிறப்பாக டைமிங் செய்கிறார். கீழ் வரிசையில் ஜித்தேஷ், லிவிங்ஸ்டன், டிம் டேவிட் போன்றோர் இருக்கும் போது, கூடுதல் நம்பிக்கை அளிக்கிறது. ரஜத் பட்டிதர் எப்போதும் செய்வதை இம்முறையும் செய்திருக்கிறார்.

- Advertisement -

மும்பை அணிக்கு சோகம்

ரஜத் மற்றும் ஜித்தேஷ் இருவருமே சிறந்த இன்னிங்ஸை ஆடி கூடுதலாக 20 ரன்களை சேர்த்திருக்கிறார்கள். மும்பை அணியின் ஒரு ஸ்பின்னர் வெளியில் சென்றால், எங்களுக்கு சாதகமாக அமைந்தது. ஏனென்றால் முக்கியமான ஒரு ஸ்பின்னர் வெளியில் செல்லும் போது, வேகப்பந்துவீச்சாளரால் சிறிய பவுண்டரியை தடுக்க முடியாது.

ஹர்திக் பாண்டியா பந்தின் வேகத்தை முழுமையாக கைவிட்டு பவுலிங் செய்தார். அதனால் பந்து பேட்டிற்கு வரவில்லை. சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளாக நாங்கள் வெல்லவில்லை. இம்முறை அதனை சாதித்தோம். அதனால் மும்பை அணிக்கு எதிராக கடைசி போட்டிகளில் அடைந்த தோல்வியை, இம்முறை மாற்றுவோம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles