நான் விளையாடிய விதம் எல்லாம் எனக்கு பத்தாது.. நான் இன்னும் வேற மாதிரி மாறனும்.. ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய வைபவ் பேட்டி

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் மகுடத்தை கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் கோப்பையைத் தவிர அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட் அதிக ஸ்ட்ரைக் ரேட் என இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் விருதுகளை பெற்றார்கள். அதில் குறிப்பாக 15 வயதான இளம் பாலகன் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்சி, இந்த ஆண்டு அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.

- Advertisement -

இந்த வருடம் மொத்தமாக 15 போட்டிகளில் விளையாடிய அவர், 776 ரன்கள் மற்றும் 230. 30 ஸ்ட்ரைக் ரேட் உடன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் நேற்று அதற்கான விருதை பெறும் போது சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இது பற்றி அவர் கூறும் போது “இது ஒரு மகிழ்ச்சியான தருணம். சிறப்பாக இருக்கிறது அடுத்த ஆண்டு இதைவிட இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். இந்த சீசனில் அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டு அதற்கு தகுந்தவாறு விளையாடியுள்ளேன் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஒவ்வொரு போட்டியையும் ஒரே மாதிரியான அணுகு முறையில் விளையாட முடியாது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். பிளே ஆஃப் போட்டியிலும் நான் இதை அதிகம் கற்றுக் கொண்டேன். நான் இப்போது உடல் தகுதியை பராமரிக்க வேண்டும் காயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். நீண்ட காலம் விளையாட விரும்புவதால் நான் உடல் தகுதியை மேற்கொள்ள வேண்டும். மேலும் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் என்னை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்கள், பெரிய ஆதரவு தருகிறார்கள்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles