தலைவன் செயல் என்றால் இது தான் பா.. துருவ்‌ ஜூரலின் கேரியருக்காக தன் பணியைத் தியாகம் செய்யும் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த சில வருடங்களில் கேப்டன் சஞ்சு சாம்சன் வழி நடப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டும் அவரே தலைமைத் தாங்க உள்ளார். 2025 ஐ.பி.எலில் தன் அணி வீரர் துருவ் ஜூரலுக்காக பெரிய தியாகத்தை செய்யவுள்ளதாக சஞ்சு சாம்சன் அண்மையில் கூறியுள்ளார்.

- Advertisement -

ஏ.பி.டிவில்லியர்ஸ் யூடியூப் சேனலில் பேசும் போது சஞ்சு சாம்சன் இது குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளார். அதாவது, வருகின்ற ஐ.பி.எல் தொடரில் துருவ் ஜூரலின் நலனுக்காக விக்கெட் கீப்பிங்கை அவருடன் பகிரவிருப்பதாகவும், இது பற்றி ஏற்கனவே அணி நிர்வாகம், ஹெட் கோச் ராகுல் டிராவிட் ஆகியோரிடம் பேசிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் கூறிதாவது, ” ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நாங்கள் அனைத்து வீரர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்கிறோம். துருவ் ஜூரல் தனது கேரியரின் சரியான தருணத்தில் இருக்கிறார். டெஸ்ட்டில் விக்கெட் கீப்பராக அவர் செயல்படும் போது, ஐ.பி.எல் தொடரிலும் அவர் அவ்வப்போது கீப்பிங் செய்வது மிகவும் அவசியம் என நாம் கருதுகிறேன். “

- Advertisement -

மேலும், ” இது பற்றி நாங்கள் பேசி முடிவு எடுத்துவிட்டோம். நாங்கள் இருவரும் விக்கெட் கீப்பிங்கை பகிர்ந்து கொண்டு விளையாடுவோம். நான் ஃபில்டராக கேப்டன்சி செய்ததில்லை என்றாலும் இதனை ஏற்றுக் கொள்கிறேன். துருவ் ஜூரலிடம் அவரின் கேரியர் கருதி வரும் ஐ.பி.எலில் அவர் கீப்பிங் செய்வது பற்றி பேசிவிட்டேன். பார்க்கலாம் எல்லாம் எவ்வாறு போகுது என்று. அணியின் நலனே முதலில். ” என்றார் சாம்சன்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த சில வருடங்களில் ஜெய்ஸ்வால், பராக், ஜூரல் என இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து மேம்படுத்தி இந்திய அணிக்குக் கொடுத்துள்ளனர். அதனால் 20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட ஜூரலை இந்த முறை 14 கோடிகளுக்குத் தக்க வைத்துள்ளனர். சாம்சனும் டி20ஐயில் மூன்று சதங்கள் விளாசி இந்திய அணியில் விக்கெட் கீப்பராக நீடித்து வருகிறார். இந்த நிலையில் அணியின் ச வீரரின் கேரியரையும் கருதி அவர் தன் பணியைப் பகிர்வது உண்மையிலேயே தலைவன் செயல்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles