17 வது ஐபிஎல் சீசன் திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சிகள் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில், முதல் போட்டியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ரசிகர்களின் ஆரவார கரகோஷங்களுக்கு இடையே டாஸ் வென்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சென்னை அணியில் முஸ்தபிகுர் ரகுமான், ரச்சின் ரவீந்தரா, டாரி மிச்சல் மற்றும் தீக்ஷானா ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக இடம் பெற்று இருக்கின்றனர். மேலும் பெங்களூரு அணியில் கேமரூன் கிரீன், கேப்டன் டூ பிளஸ்சி, மேக்ஸ்வெல் மற்றும் அல்ஜாரி ஜோசப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதன்படி டாஸ் வென்ற பெங்களூர் அணி முதல் பேட்டிங் செய்ய களம் இறங்கி, தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பாப் டு ப்ளஸ்சி ஆகியோர் களமிறங்கினர். எனவே சென்னை அணியின் முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சகார் வீசினார். முதல் ஓவரை நிதானமாக எதிர்கொண்ட இந்த ஜோடி இரண்டாவது ஓவரில் ஆட்டத்தின் கியரை மாற்றியது.
துஷார் தேஷ் பாண்டே வீசிய இரண்டாவது ஓவரை எதிர்கொண்ட டு பிளஸ்சி இரண்டு பவுண்டரிகளை விளாசினார். பின்னர் மூன்றாவது தீபக் சாகர் வீச, அந்த ஓவரில் நான்கு பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தின் கியரை ஒட்டுமொத்தமாக மாற்றினார். பின்னர் ஆட்டத்தின் திருப்புமுனையாக 22 பந்துகளில் எட்டு பவுண்டரிகள் குவித்து 35 ரன்கள் விளாசிய நிலையில் கேப்டன் டூப்ளஸ்சி முஸ்பிகுர் ரஹ்மானின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
அதன் பிறகு கடந்த சீசனில் காயம் காரணமாக வெளியேறிய ரஜித் பட்டிதார் தான் எதிர்கொண்ட மூன்றாவது பந்திலேயே முஸ்தபிகுர் ரஹ்மானின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் எம் எஸ் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இருந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த நட்சத்திர ஆட்டக்காரர் கிளேன் மேக்ஸ்வெல் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் கேமரூன் கிரீன் விக்கெட் சரிவில் இருந்து சிறிது நேரம் தடுத்து நிறுத்தினார். இந்நிலையில் ஆட்டத்தின் திருப்புமுனையாக முஸ்தபிர் ரஹ்மானின் பந்துவீச்சை எதிர்கொண்ட விராத் கோலி லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க, எல்லைக் கோட்டினை நோக்கி வேகமாக ஓடி வந்த ரகானே, அதனை மிக அற்புதமாக கேட்ச் பிடித்து ரவீந்திரவிடம் வீசினார்.
அதனை ரவீந்திராவும் பிடிக்க, விராட் கோலியின் இந்த விக்கெட் ஆட்டத்தின் மிக முக்கிய திறப்பு முனையாக மாறியது. தற்போது இந்த கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
WHAT AN EFFORT, RAHANE 🤯🔥pic.twitter.com/q21b6Q9YiI
— Johns. (@CricCrazyJohns) March 22, 2024

