நான் குடிப்பதை நிறுத்தி 6 மாசம் ஆச்சு.. அதுக்கு ரொம்ப முக்கிய காரணம் இதுதான்.. 150 சதவீதம் இதை செய்யணும் – பஞ்சாப் வீரர் பேட்டி

ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கும் நிலையில் இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த முறை ஐபிஎல் பைனலுக்கு வந்து அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி திகழ்கிறது. எனவே அந்த வரலாற்றை மாற்றும் விதமாக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டு பைனல் வரை சென்றது.

- Advertisement -

ஆனால் இறுதிப் போட்டியில் பெங்களூர் அணியும் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியதால் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்த சூழ்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 18 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இந்திய பவுலர் யுஸ்வேந்திர சஹால், தான் குடிப்பதை நிறுத்தி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியின் போது மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “எனக்கு 35 வயதாகிறது. எனவே நான் இப்போது குடிப்பதை நிறுத்தி விட்டேன். நான் குடித்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஏனென்றால் என்னை சார்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நான் 150 சதவீதம் பங்களிப்பு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல் இளம் வீரர்கள் என்னிடம் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்று இருக்கும் அளவுக்கு நான் செயல்பட வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles