தப்பா நினைக்காதீங்க.. இந்திய அணி இவ்ளோ சொதப்ப.. காரணம் நிதிஷ் ரெட்டி, ஜடேஜா தான்.. அவங்கள உங்களால தூக்கவே முடியாது.. புஜரா பேட்டி

ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கா ட்ராபி ( 2024-25 )தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அடிலெய்டில் நடந்த பிங்க்-பால் டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கபாவில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியானது மழையால் டிராவில் முடிந்தது.

- Advertisement -

இதுவரையிலான டெஸ்ட் தொடரே ஆய்வு செய்யும் போது கே.எல்.ராகுலைத் தவிர மற்று எந்த பேட்டர்களும் சரியாக தனது பங்களிப்பை கொடுக்கவில்லை. சில வேளையில் பேட்டர்கள் போராடினாலும் பந்துவீச்சு இந்திய அணியின் பலவீனமாக உள்ளது என்று புஜாரா கூறியுள்ளார்.

- Advertisement -

இவர்கள் இருவரையும் அணியில் இருந்து எடுக்க வேண்டும்:

இந்திய அணியின் முன்னாள் வீரரான புஜாரா ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறியதாவது, “இந்திய பந்துவீச்சு கொஞ்சம் பலவீனமாக இருப்பதுதான் என்னுடைய மிகப்பெரிய கேள்வியும், கவலைக்கான காரணமும் கூட. பேட்டிங் கொஞ்சம் சிறப்பாக உள்ளது, தொடக்க ஆட்டக்காரர்கள் ஆகிய முதல் ஐந்து பேர் சிறப்பாக செயல்படவில்லை, ஆனால் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் வீரர்களாகிய, ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் (ரெட்டி), மற்றும் டெய்லண்டர்கள், பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக பங்களித்தனர்.

- Advertisement -

இப்போது, பந்துவீச்சில் பலவீனம் உள்ளது, நீங்கள் அணியை எப்படி சரிப்படுத்துவீர்கள்? இதுதான் என்னுடைய மிகப்பெரிய கேள்வி, ஏனென்றால் உங்களால் நிதிஷை மற்றும் ஜடேஜாவை அணியிலிருந்து எடுக்க முடியாது என்றால், இந்திய அணியின் உங்களது பங்களிப்பு என்னவா இருக்கும்?, ”என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எப்படி பவுலிங் மேம்படுத்த போறீர்கள்?

“[ரவிச்சந்திரன்] ஆஷ்வின் ஓய்வு எடுத்து விட்டார், எனவே இப்பொழுது இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் தான் இருக்கிறார்கள், அவர்கள் மெல்போர்னில் விளையாடுவார்களா என்பதும் கேள்விக்குறிதான். அப்படியானால், நீங்கள் எப்படி பந்துவீச்சை பலப்படுத்த போகிறீர்கள்?

- Advertisement -

ஏனெனில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் தான் மிகவும் முக்கிய பங்காற்றுகிறார்கள், ஆனால் அவர்களின் பங்களிப்பானது, நான்காவது மற்றும் ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளர்களாகும், நிதேஷ் குமார் நான்காவது இடத்திலும் மற்றும் ரவிந்திரா ஜடேஜா ஐந்தாவது இடத்திலும் பவுலராக இருக்கிறார். அவர்கள் இரண்டு பேரையும் ஒன்றாக சேர்த்தால் அந்த பவுலிங் ஆனது நன்றாக அமையாது”.

இதையும் கொஞ்சம் படியுங்க: அஸ்வினுக்கு நடந்தது அநியாயம்.. கேப்டன்சி தராம ஏமாத்திட்டாங்க.. உண்மையா நடந்ததை நானே சொல்லுறேன் – சுனில் கவாஸ்கர் பேட்டி

விக்கெட் எடுக்கும் திறமையை யாருக்கும் கிடையாது:

மேலும் அவர், “எல்லாவற்றையும் பற்றி நாம் சிந்திக்க வேண்டியதாயிருக்கும், ஏனெனில் நீங்கள் இனிவரும் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றால், நீங்கள் 20 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். ஆனால் 20 விக்கெட் எடுக்கும் திறன் அந்த அளவில் இல்லை. ஏனென்றால் பும்ராவை தவிர மற்ற பந்துவீச்சாளர்களின் பங்கானது அவ்வளவு நன்றாக இல்லை, எனவே கூடிய விரைவில் நாம் அதை மேம்படுத்த வேண்டும், அது எப்படி மேம்படுத்த வேண்டும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் தற்போதைய சூழ்நிலைகளில் அதுதான் ஒரு மிகப்பெரிய கேள்வியும் கூட” என்று புஜாரா முடித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles