யாருக்குமே இல்லாத சலுகை.. இந்திய அணிக்கு மட்டும் கிடைச்சா.. தொடர்ந்து ஜெயிக்காம என்ன பண்ணுவாங்க – பேட் கம்மின்ஸ் விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வரும் நிலையில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளை வீழ்த்தி தற்போது வலுவாக இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்திய அணி விளையாடுவது குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து அந்த அணி விளையாடும் போட்டிகள் அனைத்தையும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் என இரண்டு அணிகளுக்கு எதிராகவும் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு வலுவான வாய்ப்பு இந்திய அணிக்கு உருவாகியுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணி கம்மின்ஸ் மற்றும் 6 நட்சத்திர வீரர்கள் இல்லாமல் ஸ்மித் தலைமையில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாடுகிறது. இந்த சூழ்நிலையில் கம்மின்ஸ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது சாதகமான விஷயமாகும். மற்ற அணிகளை விட இந்திய அணிக்கு நன்மையான விஷயங்கள் இருப்பதாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இது குறித்து கம்மின்ஸ் விரிவாக கூறும்போது “தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒரு விஷயமாகும். ஆனால் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி வருவது அவர்களுக்கு பெரிய நன்மை அளிக்கக் கூடிய வகையில் உள்ளது. ஏற்கனவே இந்திய அணி வலிமையாக இருக்கிறது. இது போன்ற சௌகரியங்களும் அந்த அணிக்கு அமைந்துள்ளதால் தற்போது மிக வலுவாக இருக்கிறது. என்னுடைய ஞாபகத்தில் கோடை காலம் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க:82வது சதம்.. விராட் கோலியின் விஸ்வரூபத்தால் இந்தியா அபார வெற்றி.. வீட்டுக்கு செல்லும் பாகிஸ்தான்

இந்திய அணி எங்கள் மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில் அவர்களுக்கு எதிராக இந்த முறை டெஸ்ட் தொடரை வென்றது மிகவும் சிறப்பான விஷயமாகும். இதற்கு ரசிகர்களின் ஆதரவு சிறப்பானதாகும். இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் இழந்தால் அது இதோ உலகமே முடிந்து விட்டது போல சூழ்நிலை தோன்றுகிறது. இப்படி பார்க்கும்போது இந்திய தொடரை விட ஆஷஸ்தான் பெரியது” என்று பேசி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles