300 விக்கெட்டுகள்.. கம்மின்ஸ் படைத்த பிரம்மாண்ட சாதனை.. 8வது ஆஸ்திரேலியா பவுலராக சம்பவம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

சுருண்ட தென்னாப்பிரிக்கா

இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்களை எடுத்திருந்தது. இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்தை பவுமா – பெடிங்கம் இணை தொடங்கியது. இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்த நிலையில், பார்ட்னர்ஷிப் 64 ரன்களை எட்டியது. அப்போது பவுமா 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

இதன்பின் பெடிங்கம் ஒருமுனையில் போராடி ரன்களை சேர்க்க, வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்ஸில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

கம்மின்ஸ் சாதனை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்மின்ஸ் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 14வது முறையாகும். அதேபோல் கேப்டனான பின் கம்மின்ஸ் 9வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இதன் மூலமாக பிஷன் சிங் பேடியின் சாதனையை முறியடித்ததோடு, ரிச்சி பென்னட் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் ஜாம்பவான் இம்ரான் கான் 12 முறை 5 விக்கெட்டுகளை கேப்டனாக வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 8வது ஆஸ்திரேலியா வீரர் என்ற பெருமையையும் கம்மின்ஸ் படைத்துள்ளார். இதன் மூலமாக கேப்டனாக சரியான நேரத்தில் கம்மின்ஸ் சாதனை படைத்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles