பாகிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் தான் கிரிக்கெட்டுக்கு திரும்பி வருவதற்கு முக்கிய காரணம் மகேந்திர சிங் தோனி சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் தான் என்று கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். துபாயில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்த இவர் பிறகு பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் உதவியால் சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் மிக முக்கியமான வீரராக இவர் பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் வித்தியாசமான முறையில் பந்து வீசுவது பெரிய சர்ச்சைகளை உண்டாக்கி இருக்கிறது. இவர் குறித்து இந்திய பக்கத்தில் இருந்து சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் போட்டிக்கிடக்கிறது. மேலும் இந்தியர்கள் அழுத்தத்தில் இருப்பதால்தான் தன் குறித்து இப்படி பேசிக் கொண்டே இருக்கிறார்கள் எனக்கு இதில் கவலையில்லை என்று அவர் பதில் அளித்தது மேலும் சூழ்நிலையை பரபரப்பாகி உள்ளது. இந்த நிலையில் உஸ்மான் தாரிக் தோனி குறித்து பேசி இருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து உஸ்மான் தாரிக் பேசும் பொழுது “நான் ஒரு நிலையில் கிரிக்கெட்டில் சாதித்து பெயர் எடுக்கும் எண்ணத்தை கைவிட்டு விலகி விட்டேன். அந்த நிலைமையில் தான் ஒரு முறை தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்தப் படத்தைப் பார்த்ததும் என்னால் சாதிக்க முடியும் என்கின்ற எண்ணம் மீண்டும் வந்து விட்டது. அந்தப் படம் எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. நான் கிரிக்கெட் விளையாடுவதற்கு அந்த படம் தான் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.

