எச்சரிக்கையா இருங்க.. இந்திய அணிக்கு எதிரா ஸ்பெஷல் அப்ரோச் வச்சிருக்கன்.. தப்பிக்க முடியாது – பாகிஸ்தான் பர்கான் பேச்சு

பாகிஸ்தான் டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபர்கான் இந்த முறை டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக அதிரடியான முறையில் பேட்டிங்கை தொடர்வோம் என சவால் விட்டிருக்கிறார். மேலும் ஆசிய கோப்பை தொடரிலேயே தங்கள் அணி ஒருதலை பட்சமாக இந்திய அணியிடம் சரணடைந்து தோல்வியடையவில்லை என்றும், தாங்கள் கடுமையான முறையில் போராடியே இந்திய அணியிடம் தோல்வி அடைந்திருந்தோம் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசும் பொழுது “முதலில் எல்லோரும் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் நாங்கள் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியிடம் சரணடைந்து தோல்வியடையவில்லை. நாங்கள் அந்த தொடரில் அவர்களிடம் மோதிய எல்லா போட்டியிலும் கடைசி வரையில் போராடியே தோல்வி அடைந்தோம். மேலும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அவர்களுக்கு எதிரான போட்டியில் நாங்கள் வழக்கம்போல் அதிரடியாகத்தான் விளையாடுவோம். அவர்களுக்கு எதிரான எங்கள் திட்டம் இதுதான்”

- Advertisement -

“இப்போது நான் நல்ல முறையில் ரன்கள் எடுத்துக் கொண்டு வருவதால் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் ஒரு தொடக்க ஆட்டக்காரராக மட்டும் இல்லாமல் போட்டியை முடித்துக் கொடுக்கும் ஒரு வீரராகவும் இருப்பேன். மேலும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் நான் குறைந்தது மூன்று ஆட்டநாயகன் விருதுகளையாவது வெல்ல வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறேன். இத்துடன் இந்தியா பாகிஸ்தான் போட்டியை நாங்கள் ஒரு சாதாரண போட்டியாகத்தான் எடுத்துக் கொள்ளப் போகிறோம். உண்மையில் இது எங்களுக்கு ஒரு சாதாரண போட்டிதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles