புது ஐசிசி ஹைபிரிட் மாடல்.. பாவம் இந்திய அணி.. எங்களுக்கு தான் இதால லாபம்.. இருந்ததும் போச்சே உங்களுக்கு – பாகிஸ்தான் ஜாவேத் மியான்தத் பேட்டி

2025ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வைத்து நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு மத்திய அரசு பாகிஸ்தான் செல்ல அனுமதி மறுத்ததால் இந்தியா விளையாடும் போட்டிகளை வேறு இடத்தில் மாற்ற வேண்டும் என பிசிசிஐ நிர்வாகம் ஐசிசிக்கு வேண்டுகோள் விடுத்தது.

- Advertisement -

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு மறுப்பு தெரிவித்தது. மேலும் பாகிஸ்தானிலிருந்து போட்டிகளை மாற்றினால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகுவோம் எனவும் மிரட்டல் விடுத்தது. இது ஐசிசிக்கு புதிய தலைவலியை கொடுத்தது. மேலும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களின் மறைமுக மோதல் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

மேலும் இந்திய அணியை நீக்கிவிட்டு ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியை நடத்தவும் பாகிஸ்தான் ஐசிசியிடம் கேட்டுக் கொண்டது. எனினும் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கவில்லை என்றால் போட்டியின் ஒளிபரப்பாளர்கள் விலகுவார்கள் என தெரிவித்த ஐசிசி இதனால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் எனவும் எச்சரித்தது. மேலும் ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் ஒத்துக்கொண்டு விளையாட சம்மதித்தால் போட்டி நடைபெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிவித்த ஐசிசி பாகிஸ்தான் வாரியம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தால் அவர்களை தொடரிலிருந்து நீக்கிவிட்டு மற்றொரு அணி சேர்க்கப்பட்டு வேறு நாட்டில் வைத்து சாம்பியன் டிராபி நடைபெறும் எனவும் அதிரடியாக அறிவித்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஐசிசி அறிவித்த ஹைபிரிட் மாடலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டது. மேலும் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணியும் ஹைபிரிட் மாடலில் விளையாடும் என்ற கோரிக்கையுடன் ஒத்துக் கொண்டது. இதனையடுத்து இந்தியா விளையாடும் போட்டிகளை தவிர மற்ற போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்தது. மேலும் இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால் இரண்டு அரை இறுதிப் போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும் எனவும் ஐசிசி அறிவித்தது. இந்தியா அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் இந்திய அணி விளையாடும் அரை இறுதிப் போட்டி துபாயில் நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் ஐசிசி அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் ஐசிசி அறிவித்த புதிய ஹைபிரிட் மாடலால் பாகிஸ்தான் அணிக்கு தான் லாபம் என அந்த அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான ஜாவித் மியான்டட் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பாகிஸ்தானின் பி டி ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான விவகாரத்தில் சாமர்த்தியமாக முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் பிசிபி நிர்வாகம் மிகவும் சதுர்யமாக செயல்பட்டு தங்களுக்கும் சாதகமான சில விஷயங்களை பெற்றிருப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்திருக்கிறார். தங்களது நிலையை விட்டுக் கொடுக்காமல் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாகவும் அவர் பாராட்டினார். தங்களது முடிவில் பிடிவாதமாக இருந்து சாம்பியன் டிராபி போட்டியில் விளையாடாமல் இருந்தால் பாகிஸ்தான் அணி ஐசிசி மற்றும் பிற நாடுகளிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

தற்போது அவர்கள் எடுத்திருக்கும் முடிவு இந்தியாவை விட பாகிஸ்தானிற்கு அதிக லாபம் என தெரிவித்துள்ளார். 2025 ஆம் வருட சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட விட்டால் பாகிஸ்தான் அணியும் இந்தியாவில் நடைபெறும் ஐ சி சி போட்டிகளில் விளையாடாது என பாகிஸ்தான் நிர்வாகம் கோரிக்கை வைத்திருந்தது. அந்தக் கோரிக்கையை ஐசிசி ஏற்றுக் கொண்டது.

இதனால் 2025 ஆம் வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி விளையாடும் ஆட்டங்கள் ஹைபிரிட் முறையில் நடைபெறும். இதனைத் தொடர்ந்து 2026 ஆம் வருடம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறயிருக்கும் ஆண்கள் டி20 உலக கோப்பையிலும் பாகிஸ்தான் அணி ஹைபிரிட் முறையில் விளையாடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது இந்திய அணியின் அதிகார பலத்திற்கு பாகிஸ்தான் கொடுத்த அடி எனவும் ஜாவித் மியான்டட் தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles