இந்தியா கூட ஆடறோம்.. ப்ளீஸ் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செஞ்சு கொடுங்க – கெஞ்ச ஆரம்பித்த பாகிஸ்தான்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாட முடியாது என கடந்த வாரத்தில் பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் இலங்கை கிரிக்கெட் வாரியம் இறங்கியிருந்தது. தற்பொழுது ஐசிசி அமைப்பு நேரடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் இது சம்பந்தமாக பேச்சு வார்த்தையை நடத்திக் கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் தங்களுக்கு சமமான நிதி பங்கீட்டை ஐசிசி வழங்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான தொடரை இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடத்த வேண்டும் என்றும் நிபந்தனை வைத்ததாக செய்திகள் வெளியானது. அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து, எந்த ஒரு சூழ்நிலையிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனிப்பட்ட முறையில் விளையாட முடியாது என்று தெரிவித்துவிட்டது.

- Advertisement -

இந்த நிலையில் தங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை வைத்து ஏதாவது செய்து விட வேண்டும் என்று முயற்சி செய்யும் பாகிஸ்தான் புதிய நிபந்தனை ஒன்றை விதித்திருக்கிறது. அதில் இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ் என மூன்று நாடுகளையும் வைத்து முத்தரப்பு தொடர் நடத்த வேண்டும் என்று கேட்டு இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் எந்த ஒரு நிபந்தனையையும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளாததால் கடைசியில் இந்த அளவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறங்கி வந்திருப்பதாக ஐசிசி பக்கத்திலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles