“நான் எடுத்த 5 விக்கெட்ல இந்த இந்திய வீரரோடது தான் என்னோட ட்ரீம் விக்கெட்” – ஆட்டநாயகன் துணித் வெல்லலாகே பேட்டி.!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

கடந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி ஆசிரியக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. ஆனால் இந்த வருடம் ஆசிய கோப்பை தொடரில் நல்ல திட்டமிடலுடன் களமிறங்கிய இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றிருக்கிறது.

- Advertisement -

முன்னதாக நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்த போதும் இலங்கை அணியின் இளம் ஆல் ரவுண்டர் வெல்லலாகே தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணியை 213 ரண்களுக்குள் கட்டுப்படுத்த உதவினார்.

- Advertisement -

நேற்றைய போட்டியின் போது மிகச் சிறப்பாக பந்து வீசிய இந்த இளம் ஆல் ரவுண்டர் தனது பத்து ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இந்திய அணியின் 5 டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக கில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி இந்திய அணியை தடுமாறச் செய்தார். மேலும் கடந்த போட்டியில் சதம் எடுத்த கேஎல்.ராகுல் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இவரது சிறப்பான பந்துவீச்சினால் இந்திய அணியால் 213 ரன்களையே போராடித்தான் பெற வேண்டி இருந்தது. இவருக்கு உறுதுணையாக மறுமுனையில் பந்து வீசிய அசலங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸ் இடைவேளையின் போது தனது சிறப்பான பந்து வீச்சி பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய வெல்லலாகே” என்னுடைய பயிற்சியாளர்கள் மற்றும் அணி மேலாண்மைக்கு நன்றி. குறிப்பாக என்னுடைய சுழற் பந்து வீச்சு பயிற்சியாளருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் புதியதாக எதுவும் முயற்சி செய்யவில்லை. வழக்கமான வேரியேஷன்ஸ் பயன்படுத்தி வீசினேன் . மேலும் அதிகமாக ரண்களை விட்டுக் கொடுக்காமல் பந்து வீசினேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது .

- Advertisement -

மேலும் “நான் வீழ்த்திய ஐந்து விக்கெட்டுகளில் விராட் கோலியின் விக்கெட் தான் ஸ்பெஷல். ஏனென்றால் அவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பது என்னுடைய கனவு. ஆரம்ப கால கிரிக்கெட் முதலாக விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற கனவு இந்த போட்டியில் நிறைவேறி இருக்கிறது. இந்த ஆடுகளம் சம நிலையில் இல்லாமல் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக உள்ளது. இருந்தாலும் எங்களிடம் பலமான பேட்டிங் வரிசை இருப்பதால் நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம்” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து 214 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி41.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் தனஞ்செயா டிசில்வா 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் 5 விக்கெட் கைப்பற்றிய வெல்லலாகே பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி 46 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ருடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை அணி தோல்வி அடைந்திருந்த போதும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட வெல்லலாகே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டிக்குப் பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது பேசிய அவர்” முதலாவதாக இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களிடம் திறமையான மற்றும் அனுபவம் மிக்க வீரர்கள் இருக்கின்றனர். துரதிஷ்டவசமாக இந்த போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறோம். மீதம் இருக்கும் மற்றொரு போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முயற்சி செய்வோம். குல்தீப் யாதவ் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். பேட்டிங்கின் போது நான் என்னுடைய நேச்சுரல் கேமை நேர்மறையான சிந்தனையுடன் விளையாடினேன். எனக்கு ஆதரவாக இருந்த சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பேசி முடித்தார் வெல்லலாகே.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles