இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலகக்கோப்பை தொடரில் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறும் 36 வது போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகீப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீரர் குஷால் பெரேரா 4 ரன்னில் ஆட்டம் இழந்தார் . இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ் 19 ரன்னில் அவுட் ஆனார். துவக்க வீரர் பதும் நிசாங்கா சிறப்பாக விளையாடி 41 ரன் எடுத்து அவுட் ஆனார். இதனால் இலங்கை 72 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய போது அசலங்கா மற்றும் சமர விக்ரமா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட் இருக்கு 63 ரன்கள் சேர்த்து நிலையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சமர விக்கிரமா 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து இலங்கை அணியின் அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் களத்திற்கு சிறிது தாமதமாக வந்தார். மேலும் வந்தவுடன் ஸ்ட்ரைக் எடுக்காமல் தனது ஹெல்மெட்டின் ஸ்ட்ராப் சரி இல்லை என்று கூறி அதற்கு பதிலாக புதியகள் மட்டும் கொண்டு வருமாறு சைக்கிளை செய்தார். அவர் களத்திற்கு வந்து ஸ்ட்ரைக் எடுக்க காலதாமதம் செய்ததால் பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகீப் நடுவர்களிடம் டைம் அவுட்டிற்கு முறையிட்டார்.
அவரது முறையிடையே ஏற்றுக் கொண்ட நடுவர்கள் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் ஆனதாக அறிவித்தனர். இதனை மாற்றுவதற்கு அவர் நடுவர்களிடமும் பங்களாதேஷ் அணியின் கேப்டனிடமும் முறையிட்டார். ஆனால் அவர்கள் கிரிக்கெட்டின் விதிப்படி அவர் ஆட்டம் இழந்தது சரிதான் எனக்கூறி மீண்டும் அவர் விளையாடுவதற்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் ஏஞ்சலோ மேத்யூஸ் எந்த பந்தும் சந்திக்காமல் ரன் எடுக்காமல் டைம் அவுட் முறையில் பெவிலியன் திரும்பினார்.
இதே கிரிக்கெட்டில் மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். ஏஞ்சலோ மேத்யூஸ் முன்பாக கிரிக்கெட் வரலாற்றில் ஆறு முறை மட்டுமே பேட்ஸ்மேன் டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்து இருக்கின்றனர். அதுவும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே இந்த நிகழ்வு நடந்திருக்கிறது. முதல்முறையாக இப்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் டைம் அவுட் முறையில் ஒரு பேட்ஸ்மேன் ஆட்டம் இழக்கும் நிகழ்வு நடந்திருக்கிறது. இந்த முறை தற்போது சமூக வலைதளங்களிலும் கிரிக்கெட் விமர்சிகர்களிடையேயும் மிகப்பெரிய விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.
எம்சிசி கிரிக்கெட் விதிகளின்படி ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆன பின்பு அல்லது ரிட்டையர்டு ஆன பின்பு புதிய பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் ஆடுகளத்திற்கு வந்து ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர் ஆட்டம் இழந்ததாக நடுவர்கள் அறிவிக்கலாம். இது தொடர்பாக முறையிட கேப்டனுக்கு அதிகாரம் இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பையில் மூன்று நிமிடங்கள் என்ற விதி இரண்டு நிமிடங்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக இந்த விதி மற்றும் கால அளவுகள் ஆட்டம் நடைபெறும் சூழ்நிலைகளை பொறுத்து முடிவு செய்யப்படும்.
இந்த ஆட்டமிழப்பின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்த வீரர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்திருக்கிறார் ஏஞ்சலோ மேத்யூஸ். அவர் தனது பாதுகாப்பு உபகரணங்களை சரி செய்ய காலதாமதம் எடுத்துக் கொண்டதாக பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகீப் அல் ஹசனிடம் முறையிட்டாலும் அவர் தனது அப்பீலை திரும்பப் பெற மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

