NZ vs AFG.. 34.4 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த நியூசிலாந்து.. 149 ரன் வித்தியாசத்தில் வெற்றியுடன் முதலிடம்.. இந்தியாவிற்கு பின்னடைவு.!

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் 16வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் டெவான் கான்வே 20 ரன்களில் ஆட்டம் இழக்க வில் யங் உடன் ஜோடி சேர்த்த ரச்சின் ரவீந்தரா அணிக்கு பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட் இருக்கு சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோர் 100 ரன்கள் கடக்க உதவினர். மிகச் சிறப்பாக விளையாடிய இந்த உலகக் கோப்பை தொடரில் தனது இரண்டாவது அரை சதத்தை நிறைவு செய்தார் .

- Advertisement -

நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 109 ஆக இருந்தபோது 32 ரன்களில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரவீந்தரா ஆட்டம் இழந்தார். அதே ஓவரின் கடைசிப் பந்தில் அரை சதம் எடுத்த யங் 54 ரன்களில் ஆட்டம் இழக்க நியூசிலாந்து அணி 110 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிச்சல் ஒரு ரன் எடுத்த நிலையில் ரஷீத் கான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி 110 ரன்கள் விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிலையில் தவித்துக் கொண்டிருந்தபோது அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் மற்றும் கிளன் பிலிப்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டனர்.

- Advertisement -

ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக இந்த இருவரும் இணைந்து 144 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய கிளன் பிலிப்ஸ் என்பது பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் 74 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர்கள் இருவருக்கும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் நான்கு கேட்சுகளை தவறவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இறுதியில் அதிரடியாக ஆடிய மார்க் சாப்மேன் 12 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மிச்சல் சான்ட்னர் 5 பந்துகளில் 7 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். இவர்கள் இருவரது சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளும் ஓமர் சாய் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர், மேலும் ரசித் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான். அந்த அணியின் துவக்க வீரர்களான குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் 11 மற்றும் 16 ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணியின் கேப்டன் ஷஹீதி எட்டு ரன்களிலும் இக்ரம் 19 ரன்களிலும் நபி 7 ரன் மற்றும் ரஷீத் கான் 8 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மத் ஷா அதிகபட்சமாக 36 ரன்களும் அஸ்மத்துல்லா ஒமர் சாய் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்க 8 பந்துகளில் கடைசி 4 விக்கெட்டுகளை இழந்து 34.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் மிச்சல் சான்ட்னர் மூன்று விக்கெட்டுகளும் பெர்குசன் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தினர். போல்ட் 2 விக்கெட், ஹென்றி மற்றும் ரவீந்திர ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி நான்கு வெற்றிகள் உடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு சென்று இருக்கிறது. நியூசிலாந்து அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா நாளை பங்களாதேஷ் அணியை சந்திக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles