என்ன நெனச்சாலும் பரவாயில்லை.. என்னை விட இந்த இந்திய பவுலர் தான் பெஸ்ட்.. வாசிம் அக்ரம் பெருந்தன்மையான பேச்சு.!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லக்னோவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு சென்று இருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் இந்தியா 229 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போதும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை 129 ரன்களுக்குள் சுருட்டினர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஆன பும்ரா மற்றும் முகமது சமி இருவரும் மிகச் சிறப்பாக பந்து வீசி ஏழு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இது கிரிக்கெட் விமர்சகர்களிடையே மிகப் பெரிய பாராட்டை பெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான வாசிம் அக்ரம் வெகுவாக பாராட்டி இருக்கிறார். மேலும் இது தொடர்பாக பாகிஸ்தான் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய அவர் பும்ரா மற்றும் சமி ஆகியோரின் பந்துவீச்சு நம்ப முடியாத வகையில் மிகவும் உலக தரம் வாய்ந்ததாக இருந்தது என குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து பேசி இருக்கும் அக்ரம் ” தற்போது உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மற்ற பந்துவீச்சாளர்களை விட அவர் தான் டாப்பில் இருக்கிறார். அவர் பந்து வீசும் வேகம் பந்தின் மீது அவருக்கு இருக்கும் கட்டுப்பாடு மற்றும் பந்து வீச்சில் அவர் பயன்படுத்தும் நுணுக்கங்கள் என ஒரு முழுமையான பந்துவீச்சாளராக பும்ரா திகழ்கிறார். மேலும் இந்த உலகக் கோப்பையில் அவர் சிறந்த பார்மில் உள்ளார்” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அக்ரம்” அவர் ஏன் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்றால் இடது கை பேட்ஸ்மன்களுக்கு அரௌண்ட் தி விக்கெட்டில் கிரீசை பயன்படுத்தி பந்து வீசுகிறார். இந்தக் கோணத்தில் பந்து வீசும் போது பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பந்து தங்களை நோக்கித்தான் வரும் என நினைத்து ஆடுவார்கள். ஆனால் பும்ரா பந்தை சீமில் லேண்ட் செய்வதால் வந்து அவுட் ஸ்விங்காகி பேட்ஸ்மேன் இடமிருந்து வெளியே செல்கிறது. பந்தின் மீதான அவரது இந்தக் கட்டுப்பாடு என்னை பிரமிப்படையச் செய்கிறது”என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது போன்ற ஒரு ஆடு களத்தில் இரண்டு அவுட் ஸ்விங்கர்கள் ஒரு ஸ்விங்கர் என மாறி மாறி பந்தை ஸ்விங் செய்வது தன்னுடைய பந்து வீச்சு பற்றிய அவரது அறிவு மற்றும் பந்தின் மீதான அவரது கட்டுப்பாடை காட்டுகிறது. இதற்காக அவர் டெக்னிக்கல் லெவலில் சிறப்பாக இருப்பதோடு மனதளவிலும் உடலளவிலும் சிறப்பாக தயாராகி இருக்கிறார். புதிய பந்தில் அவரது கண்ட்ரோல் என்னை விட சிறப்பாக இருக்கிறது. இதனால்தான் அவரை உலகில் சிறந்த பந்துவீச்சாளர் என பாராட்டுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் வாசிம் அக்ரம்.

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளில் 6 ஆட்டங்களில் ஆடி இருக்கும் பும்ரா 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பத்து மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனினும் அறுவை சிகிச்சைக்கு பிறகு பெங்களூரில் இயங்கி வரும் என்சிஏ-வில் பயிற்சி மேற்கொண்டு உடல் தகுதியை நிரூபித்து அயர்லாந்து அணியுடன் ஆன டி20 போட்டி மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆசிய கோப்பையில் சிறப்பான பங்களிப்பை அளித்த அவர் தற்போது உலகக் கோப்பை போட்டியிலும் கலக்கி வருகிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சிக்கு ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles