சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட உடனேயே இந்தியா-பாகிஸ்தான் இடையே பல்வேறு சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்தன. அதன் பிறகு பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் இந்திய கிரிக்கெட் அணி மட்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லாமல் துபாயில் ஹைபிரிட் மாடல் முறைப்படி விளையாடலாம் என அறிவிக்கப்பட்டது.
இச்சூழலில், இந்திய அணி அணிந்திருக்கும் ஜெர்ஸியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறாது அறிவிக்கப்பட்டதும் அதனை தொடர்ந்து இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயர் சேர்க்கப்பட்டதும். பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவின் தேசியக்கொடி புறக்கணிக்கப்பட்டதும். இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலில் போட்டி நடைபெறும் இரண்டு அணிகளின் கொடி மட்டும்தான் பொருத்த வேண்டுமென ஐசிசி அறிவுறுத்தி இருப்பதாக பாகிஸ்தான் காரணம் காட்டியதும் என இரண்டு பிரச்சனைகளும் தற்போது ஓய்ந்திருந்த நிலையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்று வெடித்திருக்கிறது.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் நேரடி ஒளிபரப்பின் போது அதிகாரப்பூர்வ லோகோவில் பாகிஸ்தானின் பெயர் விடுபட்டதைக் கண்டறிந்த பிசிபி ஐசிசிக்கு கடிதம் எழுதியது. இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசியிடம் முறையான விளக்கம் தருமாறு பிசிபி கேட்டுக்கொண்டது. இந்த சர்ச்சைக்கு ஐசிசி உடனடியாக பதிலும் அளித்திருக்கிறது.
ஜியோ டிவி அறிக்கையின்படி, இந்தியா vs. வங்கதேச போட்டியின் போது ஒளிபரப்பப்படும் போது லோகோவில் பாகிஸ்தானின் பெயர் விடுபட்டது. கோளாறு காரணமாக ஐ.சி.சி செய்தித் தொடர்பாளர் விளக்கினார். மேலும் அவர், இந்தியா சம்பந்தப்பட்ட அனைத்து எதிர்கால போட்டிகளின் ஒளிபரப்பின் போது பாகிஸ்தானின் பெயர் உட்பட அதிகாரப்பூர்வ லோகோ காட்டப்படும் செய்தியாளர் உறுதி அளித்துள்ளார்.

