2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அனைத்து அணிகளும் பாகிஸ்தான் நாட்டில் விளையாடி வரும் நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் இந்திய கிரிக்கெட் அணி மட்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லாமல் துபாயில் ஹைபிரிட் மாடல் முறைப்படி விளையாடி வருகிறது.
இதனால் அனைத்து அணிகளும், மைதானங்களில் விளையாடும் நிலையில் இந்திய அணி மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்துள்ளது என முன்னாள் இங்கிலாந்து கேப்டனான நாசர் ஹுசைன் விமர்சித்துள்ளார்.
அவர்கள் மட்டும் வசதியாக விளையாடுகிறார்கள்:
இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் ஸ்கை ஸ்போர்ட்ஸில் கூறியதாவது; “ஹைபிரிட் மாடலில் முறையால், மிகச் சிறந்த (இந்திய அணி) அணிக்கு மிகப்பெரிய நன்மை கிடைத்துள்ளது. நான் சமீபத்தில் ஒரு ட்வீட் பார்த்தேன், அதில் ‘ போட்டியை நடத்தும் நாடு பாகிஸ்தான் ஆனால் அதனால் பயன் பெறும் நாடு இந்தியா’ என்று சொல்லியிருந்தது. ஆம், அவர்களுக்கு மற்ற அணிகளைப் போலவே வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்க தேவையில்லை, அவர்களுக்கு ஒரே இடம், ஒரே ஹோட்டல், ஒரே ட்ரெஸ்ஸிங் ரூம்.
அதேபோல், இந்திய அணிக்கு ஆடுகளத்தைப் பற்றி நன்கு தெரியும், அதனால் அவர்கள் ஆடுகளத்துக்குத் தகுந்தவாறு அணியைத் தேர்வு செய்துள்ளனர். இதனால் இந்திய அணி மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் அங்கு விளையாடுகிறார்கள். துபாயில் அவர்கள் ஆறு போட்டிகளை விளையாடப் போகிறார்கள், அவர்கள் அந்த ஆறு போட்டிகளை வென்றால், அவர்கள் இன்னொரு உலகளாவிய கோப்பையை வெல்வார்கள்”
புத்திசாலித்தனமாக இந்திய அணி வீரர்களை தேர்வு செய்துள்ளார்கள்:
மேலும் அவர், “இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதில் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தார்கள். துபாயின் நிலைமை எப்படி இருக்கப்போகிறது. முன்கூட்டியே அறிந்திருக்கலாம். அதனால் தான் அவர்கள் அனைத்து ஸ்பின்னர்களையும் தேர்வு செய்தனர். ஆனால் இந்திய ஊடகங்கள் ‘நீங்கள் கூடுதல் சீமரை ஏன் தேர்வு செய்யவில்லை? ஏன் இவ்வளவு ஸ்பின்னர்கள்?’ என சில சர்ச்சைகளை ஏற்படுத்தினர். ஆனால் அவர்களுக்கு இப்போது விடை கிடைத்திருக்கும்,” என்று கூறியுள்ளார்.

