ஹர்திக் பாண்டியா இல்லனா எங்களால இது முடியாது.. இதுக்கு அடித்தளமே அவர்தான்.. டிம் டேவிட் பேச்சு

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் தொடக்கம் மிக சுமாராகவே இருந்தாலும், ஐந்தாவது போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான பெற்ற வெற்றியின் மூலம் தற்போது வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறது.

- Advertisement -

பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் வலுவாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி சில சறுக்கல்களில் இருந்து தற்போது மீண்டு வந்திருக்கிறது. நாளை நடைபெற இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா மிக முக்கியமான நபராக இருப்பார் என்று அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிக்கட்டத்தில் இரண்டு அதிரடி பேட்ஸ்மேன்களான ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் டிம் டேவிட் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன்களை வெகுவாக உயர்த்தினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 234 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இருப்பினும் அப்போட்டியிடம் ஹர்திக் பாண்டியா பெரிதும் விளையாடவில்லை. ஏற்கனவே அவரது கேப்டன்சி மீது சில விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் தற்போது பேட்டிங்கும் கவலைக்குரிய நிலையில் இருக்கிறது. அவரது பழைய பார்மை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்பார்த்து இருக்கிறது

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து பேசி உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பேட்ஸ்மேன் டிம் டேவிட் கூறும் பொழுது
“கடைசி போட்டியில் நாங்கள் எவ்வாறு ரன்களைக் குவித்தோம் என்பது பற்றி ஆலோசித்தோம். ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் தீவிரமான வேலையை செய்து வருகிறார். கடந்த சில போட்டிகளில் பார்த்தால் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாட சற்று போராடினோம். ஹார்த்திக் சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்

- Advertisement -

அதனால்தான் எங்களால் இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாட முடிந்தது. அவர் கடைசி நேரத்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்துதான் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். நீங்கள் எக்ஸ்ட்ராவாக இன்னொரு பேட்ஸ்மேன் வைத்திருப்பது அதிரடியாக விளையாடும் சுதந்திரத்தை கொடுக்கிறது. சிலர் அதை பயன்படுத்தி அதிரடியாக விளையாடுகிறார்கள் சிலர் எச்சரிக்கையாக விளையாடுகிறார்கள். கொல்கத்தா அணி சுதந்திரமாக விளையாடுகிறது.

இதையும் படிங்க:சிக்ஸர் அடிச்சு ஜெயிக்க வைக்கிறது ஓகே.. ஆனா அதுக்கு முன்னாடி இந்த விஷயம் நம்மகிட்ட இருக்கணும்.. வெற்றிக்குப் பின் ரஷீத் கான் பேச்சு

இருப்பினும் சுதந்திரமாக விளையாடித்தான் சென்னை அணிக்கு எதிராக அதன் பேட்டிங் ஆர்டர் சரிந்தது. எனவே இதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. ஆனால் ஹர்திக் பாண்டியா முன் வரிசையில் இறங்கி பொறுப்பாக விளையாடி அதிரடியாக விளையாட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் அதே நேரம் அவர் எவ்வளவு திறமையான வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது முழு சக்தி குறித்த நேரத்தில் வெளிவரும். அவருக்கான நேரம் வரும் பொழுது நிச்சயம் ஆட்டத்தினை வெல்வார்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles