ஸ்பின்னர்ஸை குறி வைக்கும் மும்பை இந்தியன்ஸ்.. ராகுல் சஹர், மயங்க் மார்க்கண்டேவை வாங்க திட்டம்?

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக பல்வேறு அணிகளும் டிரேட் மூலமாக வீரர்களை வாங்க முயற்சித்து வருகிறது. ஏற்கனவே சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை டிரேட் செய்து ராஜஸ்தான் அணியிடம் இருந்து வாங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது. சிஎஸ்கே அணியில் இருந்து ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு செல்லவுள்ளார். 

- Advertisement -

அதேபோல் லக்னோ அணியிடம் இருந்து ஷர்துல் தாக்கூரை மும்பை அணி வாங்கியுள்ளதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். மும்பை அணியில் இருந்து அர்ஜுன் டெண்டுல்கர் லக்னோ அணிக்கு செல்ல உள்ளார். இந்த சூழலில் மும்பை அணி இன்னும் சில வீரர்களை டிரேட் மூலமாக வாங்குவதற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 

- Advertisement -

குறிப்பாக ஐதராபாத் அணிக்காக விளையாடும் ராகுல் சஹர் மற்றும் கொல்கத்தா அணியில் உள்ள மயங்க் மார்க்கண்டே ஆகிய இருவரையும் டிரேடில் வாங்க மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி பேசி வருகிறார். இதனால் மும்பை அணியின் திட்டங்கள் பலிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles