இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. வெளியேறிய நட்சத்திர வீரர்.. 17 வயது வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்

2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வருகிற மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து வீரர்களும் தீவிரமாக பயிற்சி எடுத்து வரும் வேளையில், ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் அனைத்து அணிகளும் உள்ளன.

- Advertisement -

இதில் ஐபிஎல்லில் வெற்றிகரமாக கருதப்படும் இரண்டு அணிகள் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மிகத் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி பொறுத்தவரை அந்த அணியின் சமீபத்திய நடவடிக்கைகளால் இந்த முறை கோப்பையைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற தீவிரத்தில் இருக்கிறது.

- Advertisement -

அதாவது சில காரணங்களால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து கழட்டி விட்டு குஜராத் அணிக்கு ஏற்கனவே கேப்டனாக செயல்பட்டு கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் தங்கள் அணியில் இணைத்துக் கொண்டு தங்கள் அணியில் இணைந்திருந்த கேமரூன் கிரீனை பெங்களூர் அணியிடம் ஒப்படைத்தது. காரணம் ஹர்திக் பாண்டியா ஏற்கனவே குஜராத் அணியை வெற்றிகரமாக வழி நடத்தி முதல் சீசனிலேயே கோப்பையை பெற்று தர உதவினார்.

- Advertisement -

எனவே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணியில் இணைத்துக் கொண்டது. கடந்த சீசனில் மும்பை அணியின் பந்து வீச்சு மிகவும் சுமாராக இருந்தது. அதாவது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் பாதியிலேயே சொதப்பியதால் அவரை கழட்டி விட்டது. மேலும் பும்ராவும் கடந்த சீசனில் காயம் காரணமாக விலகியதால் மும்பை அணியால் இறுதி போட்டிக்கு செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் நடந்து முடிந்த மினி ஏலத்தில் பந்துவீச்சை கருத்தில் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி ஜெரால்டு கோட்சே, தில்சன் மதுசங்கா, நுவான் துஷாரா, முகமது நபி போன்ற வீரர்களை வாங்கி பந்துவீச்சை பலப்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சில் பலமாக இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இலங்கை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்சன் மதுசங்கா பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்தார்.

- Advertisement -

ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த பெஹண்ட்ராப் காயமடைந்து வெளியேறி இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடது கை வேகப்பந்துவீச்சாளர் இல்லாத நிலை உருவானது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தென் ஆப்பிரிக்க u19 அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான க்வேனா மபாகாவை அதிரடியாக ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இவர் சமீபத்தில் நடந்து முடிந்த அண்டர் 19 உலக கோப்பையில் இவரது பந்துவீச்சு அனைவரையும் கவர்ந்திருந்தது. எனவே இனி வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இவரை எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles