சிஎஸ்கேவின் ஹீரோ சூர்யகுமார் யாதவ்.. 17.2 ஓவர்களில் சன் ரைசர்ஸை தோற்கடித்தது.. புள்ளி பட்டியலில் சிஎஸ்கேவுக்கு உதவி செய்த மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்து இருக்கின்றது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய உதவி செய்திருக்கிறது. மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் இந்த போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் சன் ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா மற்றும் ட்ராவிஸ் ஹெட் கூட்டணி பவர் பிளேவில் 56 ரன்களுக்கு தங்களது முதல் விக்கட்டை பறி கொடுத்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக்சர்மா 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு சன்ரைசர்ஸ் அணி வீரர்களின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன.

- Advertisement -

இதில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் ஓரளவு சிறப்பாக விளையாடி 30 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார் இதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 17 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் இரண்டு சித்தர்களுடன் 35 ரன்கள் குவித்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது.

இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ஆனால் மும்பை அணிக்கு தொடக்கமே பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. பவர் பிளேவில் நான்கு ஓவர்களில் 31 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இசான் கிசான் 9 ரன்களிலும், ரோகித் சர்மா நான்கு ரன்களிலும் நமன் திர் 0 ரன்னிலும் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்குப் பின்னர் ஆட்டத்தின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டது. அபாரமாக விளையாடிய இந்த கூட்டணி 79 பந்துகளில் 143 ரன்கள் குவித்தது. மிகச் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 51 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார் இதில் 12 பவுண்டர்களும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 200 ஆக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பழைய மாதிரி இல்ல.. இந்த தடவை இந்தியாவுக்கு எதிரா பக்காவா ஸ்கெட்ச் போட்டுட்டு இருக்கோம்.. அதிலும் அவருக்கு.. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்பேட்டி

அவருடன் பாட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மா 32 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 17 ஓவர்களில் 174 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி பெற வைத்தது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தால் 14புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணிக்கு பெரிய உதவி செய்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles