20 ரன்கள் குறைவு.. பேட்டிங்கில் திட்டங்களை செயல்படுத்தவில்லை.. எலிமினேட்டர் பதற்றமே கிடையாது.. ஹர்திக் பாண்டியா!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை சேர்த்தது. இதனை பஞ்சாப் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டியது. பிரியன்ஷ் ஆர்யா மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் இடையிலான பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை மாற்றியது.

- Advertisement -

இதன் காரணமாக மும்பை அணி பிளே ஆஃப் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் விளையாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த தோல்வி பற்றி மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா சொல்லும் போது, பிட்சின் செயல்பாடுகளை பார்க்கும் போது நாங்கள் 20 ரன்களை குறைவாக சேர்த்துவிட்டோம் என்று நினைக்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டில் நடக்கும்.நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா பேச்சு

இந்த போட்டியில் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தோல்விக்கு அதுதான் காரணம். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அப்படிதான். மும்பை அணி 5 கோப்பையை வைத்திருக்கிறது. அதனால் மும்பை அணியை வழிநடத்துவது எளிதல்ல. எப்போது நம் ஆக்சிலேட்டரில் இருந்து கால்களை எடுக்கிறோமோ, அப்போது இன்னொரு அணி நம்மை முந்தி செல்லும்.

- Advertisement -

அதனால் தோல்வியில் இருந்து கற்றுக் கொண்டு அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். இந்த போட்டியில் 20 ரன்கள் குறைவாக எடுத்திருக்கிறோம். கரண் சர்மாவுக்கு பதிலாக அஸ்வனி குமாரை இம்பேக்ட் பிளேயராக கொண்டு வந்ததில் எந்த தவறும் இல்லை. அஸ்வனி குமார் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த பிட்சில் அவருக்கு சிறப்பாக பவுலிங் செய்ய முடியும் என்று நம்பினொம். பிட்சில் எந்த மாற்றமும் நடக்கவில்லை.

எலிமினேட்டர் சுற்று

பஞ்சாப் அணியின் பிரியன்ஷ் ஆர்யா மற்றும் இங்கிலிஸ் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். அந்த பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. தவறாக வீசிய எல்லா பந்துகளிலும் ரன்களை குவித்தனர். அதேபோல் சில நல்ல ஷாட்களை ஆடினார்கள். இறுதியாக நாங்கள் சவாலான கிரிக்கெட்டை விளையாடவில்லை. அதுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

- Advertisement -

எலிமினேட்டர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், பேட், பால், ஃபீல்டிங் என்று அனைத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டும். சரியான திட்டத்திற்கு விளையாட வேண்டும். பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பேட்டிங்கில் புதிய திட்டங்களை செய்ய வேண்டும். எந்த பிட்சில் என்ன செய்ய வேண்டும் என்று கணிக்க வேண்டும். எந்த பதற்றமும் கிடையாது. என்ன செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles