பும்ரா, ரோகித் சர்மாவுக்கு கூட அட்வைஸ் செய்கிறார்கள்.. மும்பை அணியில் பயிற்சியாளர்களின் அதிகாரம்.. ஹர்பஜன் சிங் ஆவேசம்

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்சிபி – பஞ்சாப் அணிகள் விளையாட உள்ளன. குவாலிஃபையர் 2வது போட்டியில் மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றியை பெற்றது. இதனால் மும்பை அணி தொடர்ச்சியாக 5வது சீசனாக கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

ஹர்பஜன் சிங் ஆவேசம்

இதற்கு மும்பை அணியின் நிர்வாகத்தை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக சாடி இருக்கிறார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், மும்பை அணியின் ஓய்வறையை கொஞ்சம் பாருங்கள். மும்பை அணி பவுலர்கள் ரன்களை விட்டுக் கொடுக்கும் போது, பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கிறது.

- Advertisement -

பும்ரா போன்ற ஒரு வீரருக்கு பயிற்சியாளர்கள் வந்து அட்வைஸ் கொடுக்கிறார்கள். அவர் களத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள். ஒரு ஓய்வறை என்பது எப்போதும் நிதானமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும். பயிற்சியாளர்கள் எப்போதும் சில அட்வைஸை மட்டுமே அளிக்க வேண்டும்.

- Advertisement -

பயிற்சியாளர்கள் குறுக்கீடு

ஒருபோதும் அதிருப்தியையோ, தீவிரத்தையோ வெளியில் காட்டக் கூடாது. எனக்கு பயிற்சியாளர்கள் அதீத அளவில் குறுக்கீடு செய்வதாக தோன்றியது. அப்படி நடக்கும் போது கேப்டன் மீதான நம்பிக்கை இழந்து, குழுவின் நம்பிக்கையையும் உடைத்துவிடும். பும்ரா மட்டுமல்ல, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரும் ஜாம்பவான் வீரர்கள் தான்.

அவர்கள் விளையாடும் போது, என்ன செய்கிறார்களோ அதனை செய்ய அனுமதிக்க வேண்டும். சரியான முடிவுகள் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே தலையீடு செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் மூவரும் இணைந்து ஏராளமான கோப்பைகளை வென்றிருக்கிறார்கள். அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சிக்ஸ் சென்றால் கூட பயிற்சியாளர்கள் உடனடியாக தலையிட்டு சைகை காட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles