வெறும் 141 ரன்.. பல்பு வாங்கிய ஸ்ரேயாஸ் சூரியகுமார் மும்பை அணி.. தமிழக அணி இமாலய ரன் குவிப்பு.. புச்சி பாபு தொடர்

புச்சி பாபு கோப்பை அகில இந்திய கிரிக்கெட் தொடர் போட்டிகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தொடரில் மும்பை , ஹைதராபாத், ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு ரஞ்சி அணிகளும் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. தமிழகத்தில் திருநெல்வேலி, திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டிகள் ஃபார்மேட்டில் நடத்தப்படும் இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமானதாகும்.

- Advertisement -

கோயமுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மைதானத்தில் நேற்று தொடங்கிய போட்டியில் மும்பை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த டிஎன்சிஏ லெவன் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. டிஎன்சிஏ அணியின் பூபதி வைஷ்ண குமார் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் எடுத்தார். மேலும் துவக்க வீரர் பிரதோஸ் ரஞ்சன் பவுல் 65 ரன்களும் பாபா இந்திரஜித் 61 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

மும்பை அணியின் பந்துவீச்சில் ஹிமன்சூ சிங் 5 விக்கெட்டுகளும் சம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து பலம் வாய்ந்த மும்பை அணி பேட்டிங் ஆட வந்தது. அந்த அணியில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், சர்ப்ராஸ் கான் மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர்களும் முசிர் கான் போன்ற இளம் வீரர்களும் இடம் பெற்று இருந்தனர். எனினும் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் தமிழக வீரர்களின் சுழற்பந்து வீச்சை சந்திக்க முடியாமல் சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

- Advertisement -

மும்பை அணிக்கு தங்களது இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயே கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இளம் வீரரும் இந்திய அண்டர் 19 அணியின் சூப்பர் ஸ்டார் முசீர்கான் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இவர்கள் இருவரது விக்கெட்டையும் டிஎன்சிஏ 11 அணியின் கேப்டன் சாய் கிஷோர் வீழ்த்தி மும்பை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சியை கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் சக்சேனா ஆகியோர் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி மும்பை அணிக்கு ரன்களை சேர்த்தனர். இவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப்பாக 40 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் சிறப்பாக ஆடிய சூரியகுமார் யாதவ் 30 ரன்களில் அவுட் ஆனார். இவரது விக்கெட்டை தொடர்ந்து மும்பை அணி பெரும் சரிவை சந்தித்தது.

- Advertisement -

அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் தமிழக அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். மும்பை அணியின் துவக்க வீரர் சக்சேனா ஓரளவிற்கு சிறப்பாக விளையாடி 61 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருக்கிறார். மும்பை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 141 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்திருக்கிறது. மும்பை அணியின் 5 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அணியின் பந்துவீச்சில் கேப்டன் சாய் கிஷோர் மற்றும் லக்ஷய் ஜெயின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். மேலும் அஜித் ராம் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles