ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழாவின் மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை அணிக்கும் தனக்கும் இடையேயான உறவு குறித்து சில கருத்துக்களை பேசியிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் மகேந்திர சிங் தோனியை அன் கேப்டு வீரராக 4 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது. எனவே இந்த ஆண்டும் தோனி சென்னை அணிக்காக விளையாடுவது உறுதியாக இருக்கிறது. தோனி கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து விரைவாக ஓய்வு பெற்று விடுவார் என்ற வதந்திகள் வருடா வருடம் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதுக்கு காரணம் அவரின் வயது மற்றும் முழங்கால் பிரச்சனை உள்ளிட்ட சிக்கல்களால் அவர் தடுமாறி வரும் நிலையில் ஓய்வு குறித்த பேச்சுகள் சமூக வலைதளங்களில் அதிகமாக வருகின்றன. ஆனால் தோனி இதுவரை எந்த ஒரு இடத்திலும் இதுதான் என்னுடைய கடைசி சீசன் என்று ஒருபோதும் சொன்னதில்லை. இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனி இன்று ஜியோ சினிமாவுக்கு அழைத்துள்ள பிரத்யேக பேட்டியில் நான் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் சிஎஸ்கே என்னை விடாது என்று நகைச்சுவையாக பேசி இருக்கிறார்.
இது குறித்து தோனி விரிவாக கூறும்போது ” நான் சக்கர நாற்காலியில் இருந்தால் கூட சென்னை அணி என்னை விடாது. நான் இப்படிப்பட்ட ஒரு அணியில் தான் விளையாட விரும்புகிறேன். இது என்னுடைய அணி. என்னுடைய அணி என்பதால் எவ்வளவு காலம் வரை வேண்டுமானாலும் தொடர்ந்து விளையாடலாம்” என்று தோனி கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:க்ருணால் பாண்டியா ஆட்டத்தை மாற்றிவிட்டார்.. சுயாஷ் சர்மாவை பற்றி கவலையில்லை.. ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதர்
மைதானத்தில் இன்று இரவு நடைபெற இருக்கும் போட்டியில் மகேந்திர சிங் தோனிக்கு பெரிய அளவு ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அனைத்து மைதானங்களில் தோனி களமிறங்கும் போதெல்லாம் அவருக்கென்று பெரிய ஆதரவு இருக்கும் நிலையில் தற்போது சொந்த மைதானத்தில் களமிறங்குவதால் ஆதரவு இரண்டு மடங்காக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. மேலும் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பை எடுத்து அணியை வழிநடத்துவார்.

