தொடர்ந்து மோசமான ஆட்டம்.. ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது.? எம்எஸ் தோனி வெளியிட்ட முக்கிய தகவல்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி மற்றும் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் இக்கட்டான நிலையில் இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு முடிவு குறித்து சில முக்கிய கருத்துக்களை தற்போது தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை 5 கோப்பைகளை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் தடுமாற்றமான முறையில் விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலவீனமாக இருந்து வருகிறது.

- Advertisement -

டாப் ஆர்டர் மிகவும் பலவீனமாக இருக்கும் நிலையில் தோனியும் மிடில் வரிசையில் களம் இறங்கி ரன்கள் குவிப்பதற்கு சிரமப்பட்டு வருகிறார். மேலும் அவருக்கு தற்போது 43 வயது ஆவதால் தோனி தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று கூறிய சிஎஸ்கே ரசிகர்களை தற்போது அவர் ஓய்வு பெற்றால் நன்றாக இருக்கும் என்று கூறும் அளவுக்கு வந்து விட்டனர். இந்த சூழ்நிலையில் தோனி தற்போது தனது ஓய்வு முடிவு குறித்த முக்கிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இப்போதைக்கு ஓய்வு எடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இப்போது கூட நான் ஐபிஎல் தொடரில் விளையாடி தான் வருகிறேன். எனவே எனது ஓய்வு முடிவை நான் மிகவும் சிம்பிளாக வைத்திருக்கிறேன். நான் அந்த ஆண்டு விளையாடுவது குறித்து அந்த ஆண்டுதான் முடிவு செய்வேன். எதையும் முன்கூட்டியே தீர்மானம் செய்வதில்லை. எனக்கு இப்போது 43 வயதாகிறது. ஜூன் மாதம் வந்தால் 44 ஆகிவிடும்.

- Advertisement -

இதையும் படிங்க:ரசிகர்கள் ரோட்டுக்கு வந்து பேட்டி கொடுக்கிறது பார்த்தா கஷ்டமா இருக்கு.. தோனி இனி தாமதிக்கக் கூடாது – மனோஜ் திவாரி பேட்டி

அப்போது ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் பத்து மாதங்கள் இருக்கும். அந்த 10 மாதத்திற்கு பிறகு என்னுடைய உடல் தகுதி எப்படி இருக்கிறது என்பது குறித்து நான் அப்போதுதான் முடிவு செய்வேன். இதனை சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து நான் முடிவெடுப்பது கிடையாது. என் உடல்தான் முடிவெடுக்கும். எனவே அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து நான் அந்த சமயத்தில் தான் முடிவெடுப்பேன்” என்று தோனி கூறி இருக்கிறார். எனவே தோனி இந்த ஐபிஎல் சீசனில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று தெளிவாகத் தெரிகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles