இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடியது இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் தென்னாபிரிக்க ஒருநாள் தொடருக்கு பிறகு அகர்கர் மற்றும் கம்பீர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்ற செய்திகள் வெளியானது.
இந்த சூழ்நிலையில் இந்த கருத்துக்களை கேட்டு தற்போது ரசிகர்கள் கொதித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைஃப் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் திரும்பவும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட கோரிக்கை வைக்க வேண்டும் எனவும் இனி அவர்களைப் பற்றி விவாதிக்க எந்தக் கருத்தும் இல்லை என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவர் குறித்து விவாதிக்க இனிமேல் என்ன இருக்கிறது. அவர்கள் இருவரும் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். எனவே தேர்வு குழு அவர்கள் இருவரும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வரவேண்டும் என பரிந்துரை செய்ய வேண்டும். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூத்த வீரர்கள் இல்லை என்றால் இந்திய அணி எப்படி இருக்கிறது என்று கடந்த தொடரில் பார்த்தோம். மேலும் இந்த ஒரு நாள் போட்டியிலும் சீனியர் வீரர்கள் சிறப்பாக விளையாடியதன் காரணமாகத்தான் இந்திய அணி ஜெயித்தது. எனவே இனி இவர்களைப் பற்றி விவாதிக்க எந்த கருத்தும் கிடையாது” என்று கைப் பேசி இருக்கிறார்.

