சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் அணியில் இணைந்திருப்பது அந்த அணிக்கு பெரிய வரவாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எம்.எஸ். தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவருக்கு பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட சாம்சன் இருக்கிறார் என்ற நம்பிக்கையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வைத்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் அவரே இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற கருத்துக்களும் அவ்வப்போது வலம் வந்து கொண்டிருக்க, நிஜமாகவே சிஎஸ்கே சாம்சனை கேப்டனாக நியமிக்கிறதா? அல்லது பழைய கேப்டனான ருத்ராஜ் கேப்டனாக செயல்படுவாரா? என்கிற கருத்துக்கள் தற்போது மேலோங்கி இருக்கும் நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “என்னைப் பொருத்தவரை தற்போது சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்து பெரிய தவறை சிஎஸ்கே நிர்வாகம் செய்யாது. ஏனென்றால் சாம்சன் துவக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் அதே வேளையில் கேப்டன் ஆகவும் செயல்பட விரும்ப மாட்டார். மேலும் அவர் இப்போதுதான் அணிக்கு புதியதாக வந்திருக்கிறார். மேலும் அவருக்கு சிஎஸ்கேவில் உள்ள முழுமையான விஷயங்கள் புரியாது. அது மட்டுமல்லாமல் சேப்பாக்கம் ஆடுகளத்தில் பவுலர்களை எப்படி பயன்படுத்துவது குறித்து அவருக்கு முழுமையாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை” என்று அவர் பேசி இருக்கிறார்.

