பண்ட் ரொம்ப பாவம் இப்படி வந்து மாட்டிகிட்டாரு.. 27 கோடி குடுத்து எடுத்தது இதுக்குத் தான்.. அத அவரு செய்யலனா காலி – முஹம்மத் கைஃப் எச்சரிக்கை !

2025ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலம் மிகவும் ஆரவாரமாக பல்வேறு சாதனைகளைப் படைத்தாறு முடிந்தது. வரலாற்றிலேயே அதிகபட்ச விகைக்குச் சென்ற வீரராக ரிஷப் பண்ட் பெயர் பெற்றுள்ளார். அவரை லக்னோ சூப்பர்ஜயன்ட்ஸ் அணி 27 கோடிகளுக்கு வாங்கியுள்ளது.

- Advertisement -

டெல்லி அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் ரிஷப் பண்ட் வெளியேறினார். அவரை ஏலத்தில் நிச்சயம் பஞ்சாப் கிங்ஸ் தான் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய டிவிஸ்ட் நடந்துவிட்டது. 20 கோடியில் டெல்லி ஆர்.டி.எம் செய்ய விடாப்பிடியாக ரிஷப் பண்ட் வேண்டும் என்பதால் ஒரே அடியாக 27 கோடிகளை நிர்ணயித்து வாங்கியது லக்னோ அணி.

- Advertisement -

கே.எல்.ராகுல் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து ரிஷப் பண்ட், லக்னோ அணியின் தலைமையைத் தாங்குவார். ஆனால் ராகுலை விட இந்தப் பொறுப்பு ரிஷப் பண்ட்க்கு மிகவும் சவாலாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முஹம்மத் கைஃப் கூறியுள்ளார். லக்னோ அணியின் நிர்வாகம் குறித்து மறைமுகமாக அவர் பண்ட்க்கு எச்சரிக்கையும் கொடுத்துள்ளது போல் உள்ளது.

- Advertisement -

அவர் கூறியதாவது, ” லக்னோ அணி முதல் 2 ஆண்டுகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப் பெற்றது. ஆனா இறுதிப் போட்டி வரை முன்னேறி கோப்பைக்காக மோத இயலவில்லை. கடந்த ஆண்டு அது நடக்கும் என்ற நம்பிக்கையில் நிர்வாகம் இருந்த நிலையில் ராகுல் தலைமையிலான லக்னோ அணி 5வது இடத்தில் முடித்து பிளே ஆஃப்க்கு கூட முன்னேறவில்லை. “

” என்னதான் கடந்த 3 ஆண்டுகள் அணி சிறப்பாக செய்திருந்தாலும் கே.எல்.ராகுலை நிர்வாகம் வெளியே அனுப்பியது. அவர் செய்ய முடியாததை செய்யத் தான் ரிஷப் பண்ட்டை இத்தனை பெரிய தொகையைக் கொடுத்து வங்கியுள்ளார்கள். இதனால் பண்ட் மேல் பெரிய அழுத்தம் இருக்கும். ” என்றார்.

- Advertisement -

மேலும், ” லக்னோ அணியில் நல்ல பேட்டிங் உள்ளது. பந்துவீச்சில் ஸ்பின் துறையும் சரியாக இருக்கிறது. ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் போன்ற தரமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது தான் சற்று முறையாகத் தெரிகிறது. ” எனத் தன் கருத்தைப் பதிவு செய்தார் முஹம்மத் கைஃப்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles