என்ன நடக்குது ஆஸ்திரேலிய அணியில்… மேலும் ஒரு முன்னணி வீரர் திடீர் விலகல்… செமி ஃபைனலுக்கு தகுதி பெறுமா மஞ்சள் படை

2025 ஆம் வருடத்திற்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் வைத்து வருகின்ற 19ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் 8 இடங்களை பெற்ற அணிகள் இந்தத் தொடரில் பங்கு பெற்று விளையாட இருக்கின்றன. இறுதியாக கடந்த 2017 ஆம் வருடம் சாம்பியன் டிராபி தொடர் இங்கிலாந்தில் வைத்து நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது.

- Advertisement -

1998 ஆம் வருடம் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2 வருடங்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. 2021 ஆம் வருடம் சாம்பியன் டிராபி தொடர் நடைபெற இருந்த நிலையில் கோவிட் காரணமாக போட்டி மாற்றியமைக்கப்பட்டது. மேலும் அடுத்தடுத்து 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இருந்ததால் 2025 ஆம் வருடம் சாம்பியன் டிராபி தொடர் நடைபெறும் என ஐசிசி அறிவித்தது.

- Advertisement -

மேலும் 2025 ஆம் வருட சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. இந்நிலையில் 2025 வருட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி விளையாடும் இறுதி கட்ட வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் நேற்று ஐசிசி-யிடம் சமர்ப்பித்திருக்கிறது. நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் உட்பட முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியிருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடும் 15 வீரர்களைக் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட் மற்றும் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஸ் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால் இவர்கள் மூவரும் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு பேட்டிங் ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டாய்னிஸ் திடீரென ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் தனது சொந்த காரணங்கள் காரணமாக சாம்பியன் டிராபி தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. ஏற்கனவே முன்னணி பந்துவீச்சாளர்களான கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் அணியில் இடம்பெறாத நிலையில் ஸ்டார்க் திடீரென விலகியிருப்பது ஆஸ்திரேலிய அணி ரசிகர்களையும், கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இளம் வீரர்களைக் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் எனவும் ஆஸ்திரேலியா தேர்வு குழு அறிவித்திருக்கிறது. மேலும் அந்த அணியின் முக்கிய வீரர்கள் இடம்பெறாததால் ஆஸ்திரேலியா அணி சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா.? என்ற கேள்வியும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles