நியூசிலாந்து கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்து லீக் சுற்றோடு வெளியேறி இருக்கிறது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன் விராட் கோலியை பார்த்து சில விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த டி20 உலக கோப்பை தொடரை எதிர்கொண்ட வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் எதிர்பாராத தோல்விகளை சந்தித்தது. மேலும் கத்துக் குட்டி அணிகளை அதற்குப் பிறகு இரண்டு போட்டிகளில் வீழ்த்திய போதும் நியூசிலாந்து அணியால் அடுத்த சுற்று தகுதி பெற முடியவில்லை.
இந்த தோல்விகளின் எதிரொலியாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென ராஜினாமா செய்தார். இந்த தோல்விகளுக்கு தான் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார். மேலும் அடுத்த ஆண்டுக்கான சம்பளப் பட்டியலில் இருந்தும் வில்லியம்சன் விலகியுள்ளார்.
மேலும் இது குறித்து கூறிய வில்லியம்சன் “இனிவரும் எதிர்காலங்களில் தான் டி20 அணியில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை” என்று சற்று விரக்தி உடனே பேட்டி அளித்தார். இது பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் வில்லியம்சன் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அதில் கேன் வில்லியம்சன் விராட் கோலியின் தற்போதைய பேட்டிங் தரத்தை பார்த்து சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதுகுறித்து வாகன் விரிவாக கூறும்பொழுது
” கேன் வில்லியம்சன் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக்கூடிய வீரராக நான் நினைக்கவில்லை. இந்த வருடம் விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடிய விதத்தை பாருங்கள். கடந்த சில வருடங்களாக ஸ்ட்ரைக்ரேட்டில் பின் தங்கிய கோலி இந்த வருடம் அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி ஸ்பின்னர்களுக்கு எதிராக அபாரமான ஷாட்களை விளையாடினார்.
இதையும் படிங்க:சூப்பர் 8 போட்டி.. தேவையான 2 மாற்றங்கள்.. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்
எனவே விராட் கோலியை பார்த்து வில்லியம்சன் அவரைப் போல ஒரு 15 சதவீதம் விளையாட முயற்சிக்க வேண்டும். வில்லியம்சன் 140 முதல் 150 ஸ்ட்ரைக் கேட்டில் விளையாடினால் கூட அவர் நியூசிலாந்து மற்றும் ஐபிஎல் தொடரில் நிச்சயமாக விளையாட முடியும். மேலும் அவர் தன்னுடைய பேட்டிங் ஸ்டிரைக் ரேட் அதிகரிக்க வேண்டும். அதை செய்தால் தொடர்ந்து வில்லியம்சனால் ரன்கள் குவிக்க முடியும். வில்லியம்சன் ஒரு தரமான கிளாஸ் பிளேயர். ஆனால் டைமிங் பெறுவதற்கு அவர் சிறிது நேரம் களத்தில் நின்று விளையாட வேண்டும் ” என்று மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.

