இந்த போட்டியை மறந்துருங்க.. எங்க ஃபேன்ஸ் முன்னாடி நாங்க யாருன்னு நிச்சயம் காட்டுவோம்.. சிஎஸ்கே பேட்டிங் கோச் உறுதி

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே ராஜஸ்தான் அணியின் பௌளிங்கை எதிர் கொள்ள முடியாமல் விரைவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அதற்குப் பிறகு பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் சூரியவன்சி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார். கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மோசமான தோல்விகளை சந்தித்து கடைசி இடத்தைப் பிடித்தது. எனவே இந்த முறை முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று நல்ல தொடக்கம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விட்ட இடத்தில் இருந்து தொடங்கியது போல மறுபடியும் தோல்வி பாதைக்கு சென்றுள்ளது.

- Advertisement -

அடுத்த போட்டி சொந்த மண்ணில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இது குறித்து சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் ஆன மைக்கேல் ஹசி கூறும்போது “இந்த போட்டியை விட்டு விடுங்கள் என்று தான் நான் கூறுவேன். இந்த சூழ்நிலை சரியாக இல்லாவிட்டால் எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்வதற்கு இது ஒரு பாடமாக அமைந்தது. இங்கிருந்து சென்னைக்கு சென்று நாங்கள் எங்கள் ரசிகர்களுக்கு முன் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles