இன்று ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தனது ஹோம் மைதானமாக வான்கடேவில் சந்தித்தது. முதல் இரு போட்டிகளில் தோல்வியைத் தழுவி இன்னும் இந்தத் தொடரில் புள்ளிகளை சம்பாதிக்காத அணியாக இருந்த மும்பை, இன்று அபார வெற்றியைப் பெற்று கணக்கைத் துவங்கியுள்ளது.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதல் இராண்டுப் போட்டிகளில் ஒளித்து வைத்திருந்த பலத்தை இன்று மும்பை முழுவதுமாக வெளிக்காட்டியது. போல்ட், சஹர் மற்றும் புதிய இளம் பவுலர் அஷ்வானி குமார் வேகத்தில் சீட்டுக் கட்டுப் போலா கொல்கத்தா வீரர்கள் அடுத்தடுத்து விழுந்தனர். முதல் 7 ஓவரிலயே 5 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் மட்டுமே சேர்த்து இருந்தது. ஓரளவு நின்று ஆடிய ரகுவன்ஷி 26 ரன்களில் வெளியேறினார்.
விக்கெட்டுகள் மலமலவென சரிந்தாலும், அடித்து ஆட வேண்டிய நோக்கிலேயே இருந்தனர். ரின்கு சிங் மற்றும் இம்பாக்ட் வீரராக வந்த மனிஷ் பாண்டே, சரிவை மீட்க முயற்சித்தனர். இந்த பார்ட்னர்ஷிப் 30 ரன்கள் மட்டுமே சேர்த்து நிலைப் ரின்கு 17, மனிஷ் பாண்டே 19 ரன்களில் வெளியேறினார். அதிரடி ஆட்டக்காரர் ரசல் 11 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே அடித்து க்ளீன் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார். இறுதியில், ரமாந்தீப் சிங் 1 பவுண்டரி, 2 சிக்சர் என 22 ரன்கள் சேர்க்க கொல்கத்தா அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மும்பை அணியின் பவுலிங்கில் புதிதாக அறிமுகமான இடது கை வேகப்பந்து வீச்சாளர் அஷ்வானி குமார், துல்லியமான பந்துவீச்சில் கொல்கத்தா அணியின் முக்கிய பேட்டர்கள் ரஹானே, ரின்கு சிங், மனிஷ் பாண்டே மற்றும் ரசல் ஆகியோரின் விக்கெட்டை அள்ளினார். ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக அறிமுகப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மற்றுமொரு முறை திறமையான உள்ளூர் வீரரை கண்டறிந்து பெரிய ஸ்டார் ஆக்கியுள்ளது மும்பை அணி.
மும்பை பவுலிங்கில் அஸ்வானி குமார் 4 விக்கெட்டுகள் தவிர, தீபக் சஹர் 2 மற்றும் போல்ட், பாண்டியா, விக்னேஷ் புத்தூர், சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட் என அனைவரும் பந்துவீச்சில் பங்களிதனர். தொடர்ந்து ஆடிய மும்பை அணியில் ரோஹித் வழக்கம் போல 13 சொற்ப ரன்களிலும், வில் ஜேக்ஸ் 16 ரன்களிலும் அவுட் ஆகினர். துவக்க வீரர் ரிக்கல்ட்டன் அதிரடியாக பவுண்டரி, சிக்சர் என 62* ரன்கள் அடித்தார். கடைசியில் வந்த சூரியகுமார் யாதவ் 9 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர் என 27 ரன்கள் எடுக்க மும்பை அபா வெற்றியைப் பெற்றது.
117 இலக்கை மும்பை அணி மிகச் சுலபமாக 12.5 ஓவர்களில் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் தன் முதல் வெற்றியைப் ருசித்ததோடு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேறியும் உள்ளது.

