மேக்ஸ்வெல் 201 ரன்.. அது கிரேட்டஸ்ட் நாக் கிடையாது.. இதைவிட பெஸ்ட் அவர் ஆடி இருக்கார்.. சவுரவ் கங்குலி அதிரடி பேட்டி.!

தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. லீக் போட்டிகள் முடிவை எட்டி இருக்கும் நிலையில் இந்தியா தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட 3 அணிகள் அதிகாரப்பூர்வமாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கின்றன. இன்றைய இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின்னர் 4-வது அணியும் உறுதியாகி விடும்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே பரபரப்பான போட்டியில் ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார். மேலும் உலகக்கோப்பையில் இரட்டை சதம் எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் தன் பெயருடன் இணைத்துக் கொண்டார்.

- Advertisement -

இவரது இந்த ஆட்டம் குறித்து உலகின் பல்வேறு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் வெகுவாக பாராட்டி இருந்தனர். பாகிஸ்தான் அணியின் லெஜன்ட் வாசிம் அக்ரம் மற்றும் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தங்கள் வாழ்நாளில் பார்த்த மிகச் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் ஆட்டம் என வெகுவாக பாராட்டி இருந்தனர். மேலும் இரண்டாவது பேட்டிங் என்பது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் வரலாற்றில் இரட்டை சதம் அடித்தது இதுவே முதல்முறை.

- Advertisement -

இந்நிலையில் மேக்ஸ்வெல் இன்னிங்ஸ் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். கொல்கத்தாவில் நடைபெற்று வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பங்கு பெற்று வரும் அவர் இது தொடர்பாக செய்தியாளர்களின் பேட்டியின்போது தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் கங்குலி ” ஆப்கானிஸ்தான் அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் மேக்ஸ்வெல் மிகச் சிறப்பான ஒரு இன்னிங்ஸ் விளையாடினார். அது ஒரு மிகச்சிறந்த ஆட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு மற்றும் கேப்டன்சி மிகவும் மோசமாக இருந்தது” என தெரிவித்தார்

- Advertisement -

ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் இதுதான் மிகச்சிறந்த ஆட்டம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா.? என்ற கேள்விக்கு பதில் அளித்த கங்குலி ” சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய மிகச்சிறந்த ஆட்டங்களை பார்த்திருக்கிறேன். மேலும் இன்னும் சில மிகச் சிறந்த ஒரு நாள் இன்னிங்ஸ் நான் பார்த்திருக்கிறேன். மேக்ஸ்வெல் ஆடியது மிகச் சிறப்பான ஆட்டம். ஆனால் அது ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த ஒரு இன்னிங்ஸ் என்று கூற முடியாது. போட்டியின் சூழ்நிலையில் மிகச் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் மேக்ஸ்வெல். மேலும் ஒன்பதாவது வீரருடன் இணைந்து 200 ரன்கள் எடுப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. தசைப்பிடிப்புகளுடனும் போராடினார்.

“எனினும் இது ஒரு நாள் போட்டியில் தலைசிறந்த இன்னிங்ஸ் என்று நான் கூற மாட்டேன். ஏனென்றால் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரும் ஒரு நாள் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸ் விளையாடி இருக்கின்றனர்” என்று தெரிவித்தார் கங்குலி. இந்தப் போட்டியில் 128 பந்துகளில் 201 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 100 ரன்கள் கடந்த பின்பு தசைப்பிடிப்பு காரணமாக பெரும்பாலும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களில் தான் ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles