சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இடையேயான போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி பிளே ஆப் சுற்றை விட்டு பரிதாபமாக வெளியேறியது.
இந்த போட்டிக்கு பின்னர் சென்னை வீரர் மகேந்திர சிங் தோனி தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அதற்குப் பிறகு துபாய் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர் சமூக வலைதளங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் பெரிதாக ஆர்வம் காட்டாத தோனி அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வீடியோக்களையும், போட்டோக்களையும் பகிர்வார். தனக்கு சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராம்தான் அதிக அளவில் பிடித்திருக்கிறது. அதுதான் எந்த சர்ச்சையும் ஏற்பட வாய்ப்பில்லை எனக்கு பிடித்த போட்டோக்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து விட்டு அதில் அமைதியாக இருந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து மகேந்திர சிங் தோனி விரிவாக கூறும் பொழுது
“நான் ட்விட்டரை விட இன்ஸ்டாகிராமை அதிகம் விரும்புகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ட்விட்டரில் எந்த நன்மையும் நடக்கவில்லை. குறிப்பாக இந்தியாவில் யாரைப் பற்றியாவது ஏதாவது எழுதினால் அது மிகப்பெரிய சர்ச்சையாகி விடுகிறது.
அதனால் அதில் நான் ஏன் இருக்க வேண்டும். மேலும் அங்கு 140 வார்த்தைகள் மட்டுமே பதிவிட முடியும். ஒரு விஷயத்தை அதில் தெளிவாக சொல்லவும் முடியாது. நான் ஒரு கோணத்தில் சொல்லப் போனால் மக்கள் அதை தங்களுக்கு தகுந்தவாறு வேறு ஒரு கோணத்தில் எடுத்துக் கொள்கிறார்கள். எனவே அது எனக்கான சமூக வலைதளம் இல்லை என்று தோன்றியது.
மேலும் நான் இன்ஸ்டாகிராமையே எப்போதும் விரும்புகிறேன். நான் ஒரு புகைப்படத்தையோ அல்லது ஒரு வீடியோவை பதிவிட்டுவிட்டு அப்படியே விட்டு விடுவேன். ஆனால் தற்போது அதுவும் மாறிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் நான் இன்ஸ்டாகிராமையே தேர்வு செய்கிறேன். அதில் நான் பதிவுகளை தொடர்ந்து வெளியிடுவதில்லை. கவனச்சிதறல் குறைவாக இருப்பது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது இருந்தாலும் அவ்வப்போது ரசிகர்களுக்காக ஏதாவது ஒன்றை வெளியிடுவேன்.
இதையும் படிங்க:உங்க பிரச்சனைல ஹர்திக் பாண்டியாவை பலி கடா ஆக்கிட்டீங்க.. இதுக்கு சீனியர் பிளேயர்ஸ்தான் காரணம்.. மும்பை அணி குறித்து ஹர்பஜன் சிங் பேட்டி
நான் இப்போது எங்கே இருக்கிறேன், என்ன செய்து கொண்டிருக்கிறேன், நல்லவர்களுடன் இருக்கிறேன் என்பதை எனது ரசிகர்களுக்காக தெரியப்படுத்துவேன் என்று தோனி கூறி இருக்கிறார். இந்த ஆண்டு மகேந்திர சிங் தோனி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் கூடிய விரைவில் சிகிச்சைக்காக லண்டனுக்குச் செல்ல இருக்கிறார். பின் சிகிச்சை முடித்துவிட்டு ஓய்வு பெற உள்ளார். மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கட்டாயம் விளையாடுவார் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ள நிலையில் ரசிகர்களும் அதையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

