12 ஆண்டுகளாக பஞ்சாப் அணி வெல்லவில்லையா.. கடினமாக உழைப்பர்கள் பக்கமே அதிர்ஷ்டம் இருக்கும்.. ஸ்ரேயாஸ் ஐயர் ட்விஸ்ட்

தர்மசாலா மைதானத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் வெற்றிபெற்று பஞ்சாப் அணி சாதனை படைத்துள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய பஞ்சாப் அணி, முதல் பேட்டிங் விளையாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

இதன் மூலமாக பஞ்சாப் அணி 11 ஆண்டுகளுக்கு பின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இந்த வெற்றிக்கு பின் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் போது, இந்த வெற்றியை நினைத்தால் நிறைவாக உள்ளது. ஏனென்றால் அத்தனை வீரர்களும் இந்த வெற்றியில் பங்காற்றி இருக்கின்றனர்.

- Advertisement -

பிரப்சிம்ரன் சிங் ஆட்டம் மிகச்சிறந்த ஒன்றாக அமைந்தது. அவரின் ஒவ்வொரு ஷாட்களும் கண்களில் பார்க்கவே அற்புதமாக இருந்தது. 12 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் பஞ்சாப் அணி வெல்லவில்லை என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தால், நிச்சயம் என் மனதில் ஓடிக் கொண்டே இருந்திருக்கும். எப்போது களமிறங்கினாலும் வெல்ல வேண்டும் என்பதே நோக்கம்.

- Advertisement -

பஞ்சாப் அணியின் அதிர்ஷ்டம்

அந்த மனநிலையில்தான் எப்போதும் விளையாடுவேன். அதேபோல் பஞ்சாப் அணிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் உள்ளது. ஆனால் கடினமாக உழைக்கும் வீரர்கள் பக்கமே அதிர்ஷ்டமும் இருக்கும். அனைத்து வீரர்களும் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வருகிறார்கள். ஒவ்வொரு வீரர்களுக்கும் அவர்களின் ரோல் என்ன என்பது நன்றாக தெரிகிறது.

இன்னும் கொஞ்சம் போட்டி தொடர்பான விழிப்புணர்வு மட்டும் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. சில நேரங்களில் என் மனதில் தோன்றும் முடிவுகளை எடுப்பேன். அதிகமாக புள்ளி விவரங்களுக்கு இடம் கொடுக்க மாட்டேன். என்னை பொறுத்தவரை போட்டியில் வெற்றிபெற வேண்டும். அதுமட்டும் திட்டம் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles