சொன்னா கேளுங்க.. அஸ்வின எடுக்காதீங்க.. எதிர் டீம் கையில மேட்ச்சை குடுக்குற மாதிரி.. முன்னாள் இந்திய வீரர் சர்ச்சை கருத்து.!

இன்று நடைபெற இருக்கும் உலகக் கோப்பையின் 29 வது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்தப் போட்டியில் லக்னோவில் அமைந்துள்ள இகானா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தியா ஐந்து வெற்றிகளுடனும் இங்கிலாந்து 4 தோல்விகளுடனும் இந்த போட்டியை எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -

லக்னோ மைதானத்தின் ஆடுகளம் சுழற்சிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்தியா அதிகமான சுழற் பந்துவீச்சாளர்களுடன் இன்று களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்களும் இந்தியா நீ ஒரு வேகப்பந்துவீச்சாளர் நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெருலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான ஆகாஷ் சோப்ரா இந்தியா மூன்று சுழற் பொந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவது எதிரணிக்கு சாதகமாக அமையும் என தெரிவித்திருக்கிறார்.இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில் விரிவாக பேசியிருக்கிறார். ஆட்டத்தின் இரண்டாவது பேட்டிங்கின் போது பனிப்பொழிவிற்கு வாய்ப்பு இருப்பதால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிரான சூழ்நிலை அமையும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் மூன்று சுழற் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவது இந்தியாவிற்கு எதிராக அமையும் என்று தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர்” முதலாவதாக இங்கிலாந்து அணியை நீங்கள் பார்க்கும் போது ஆப் ஸ்பின்னருடன் களமிறங்கலாம் என்று உங்களுக்கு தோன்றும் . இந்த மைதானத்தை பார்க்கும் போதும் கூடுதலாக ஒரு சுழற்சிந்து வீச்சாளரை அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என தோன்றலாம். ஐபிஎல் போட்டிகளில் இந்த மைதானத்தின் ஆடுகளத்தை பார்க்கும் போது ஆப்-ஸ்பின்னர் அணியில் இருப்பது கூடுதல் பலமாக தோன்றும். ஆனால் இது ஐபிஎல் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர் ” இந்த மைதானத்தின் ஆடுகளம் ஐபிஎல் போட்டிகளின் போது பயன்படுத்தப்பட்ட கருப்பு மண்ணால் தயாரிக்கப்பட்ட ஆடுகளம் இல்லை. இது சிகப்பு மண் கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய ஆடுகளம். இங்கு பந்துவீச்சாளர்களுக்கு வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கிறது. மேலும் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மூன்று சுனர்பூந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கினால் பனிப்பொழிவு இந்தியாவுக்கு எதிராக அமையலாம் என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதனால் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் களம் இறங்குவது இந்தியாவிற்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள அவர் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று வரும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் கூட்டணியை தொடர்வதே சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்தியா மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கினால் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக முகமது சமி விளையாட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம் சமீப காலமாக சமி மிகச் சிறப்பாக பந்து வீசி வருவது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles